சூர்யாவின் பிறந்தநாள் பரிசு

0 78

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா பொம்மன் இராணி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘காப்பான்’. லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரமாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 30-ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 21-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிரமாண்டமான முறையில் நடக்க இருக்கிறது.

ஆனால் இவ்விழா எங்கு, எப்போது நடக்கிறது என்பது குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்தின் ‘சிறிக்கி…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில்

ஜூலை 23 -ஆம் திகதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அட்வான்ஸாக, அதாவது 21 -ஆம் திகதி வெளியாக இருக்கும் ‘காப்பான்’ படப் பாடல்கள் சூர்யாவின் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக அமையவிருக்கிறது.

ரசிகர்கள் மற்றும் கோலிவூட்­டில் பெரும் எதிர்­பார்ப்பை உருவாக்கி­யுள்ள ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் பிரதமராகவும், இவரது பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்தி­ருக்கிறார்­கள்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!