நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 28

0 276

“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்

(சென்றவாரத் தொடர்ச்சி)

அந்த ஊர் வாயெ மூடத்தான் உன்னெ டிவோஸ் பண்­ணிட்டு, நான் நிவே­தாவ மெரி பண்ணப் போறேன் என்ற சுரேஷை செய்­வ­த­றி­யாது வேத­னை­யுடன் ஏறிட்டுப் பார்த்தாள், சுகந்தி.

இனி அதி­லி­ருந்து..

சுரேஷின் வார்த்­தையைக் கேட்ட சுகந்தி இதெப் பார்த்து ஊர் சிரிப்பு அடங்­காது. உங்க முகத்­துல ஊர் காறித் துப்பும் என்றாள்.இதைக் கேட்­டதும் சுரே­ஷுக்கு கடும் ஆத்­திரம் பொத்துக் கொண்டு வந்­தது. பொத்­துடி வாயயெ ! இப்­படி கத்­தி­யால குத்­துற மாதிரி பேசி பேசித் தானேடி குடும்­பத்தெக் குட்டி செவ­ராக்­கிட்ட ம் பேசாம இதுல கையெ­ழுத்து வைடி ! என அதட்­டினான்.

அது மட்டும் நான் செத்­தாலும் நடக்­காது. நான் வாழ்ந்­தாலும் செத்­தாலும் அது உங்­க­ளோடத் தான் ் என சுகந்தி உறு­தி­யாகச் சொன்னாள். வெளியே திடீ­ரென்று இடி­யு­டனும் மின்­ன­லு­டனும் கடும் மழை கொட்ட ஆரம்­பித்­தது.ஆனா, நான் உன்­னோடு வாழ விரும்­பல்ல.

காரணம்..?

காக்கைக் கூட அழகா இருக்­கும்டி ! உன் கொரங்கு முகத்த கண்­ணா­டி­யில ஒருக்கா நல்லா பாருடி. சுகந்தி எதிரே இருந்த கண்­ணா­டியில் தன் முகத்தைப் பார்த்தாள். சுரேஷ் சொல்­வதும் சரி என்று அவள் மன­துக்கே பட்­டது.

அதே கணம் பொறுமை இழுந்த சுரேஷ், பவுடர் புட்­டியை எடுத்து அந்தக் கண்­ணாடி மீது எறிந்தான்.
அந்தக் கண்­ணாடி நொறுங்கிக் கொட்­டி­யது.

அதேநேரம் டெலிபோன் மணியும் ஒலித்­தது. சுரேஷ் அதனை எடுக்­காது விறைப்­புடன் நின்றான். சுகந்தி எழுந்து சென்று ரிஸீ­வரை எடுத்து ஹலோ ! என்றாள்.

மறு முனை­யி­லி­ருந்து அவள் தாய் தேவி பேசினாள். அதே நேரம் இதுல கையெ­ழுத்து வைடி என சுரேஷ் கத்­தினான்.

நான் செத்­தாலும் அது நடக்­காது ! என சுகந்­தியும் ரிஸீ­வரைக் கையில் வைத்துக் கொண்டு தனது குரலை உயர்த்திக் கத்­தினாள். அட திமிர் புடிச்­ச­வளே ! உனக்கு பைத்­தியம் புடிச்­சி­ருக்­குடி ! எனக் கத்­தி­ய­வாறே சுரேஷ், சுகந்­தியை எட்டி உதைத்தான்.

எதிர்­பா­ராத உதை­யினால் சுகந்தி எகிறிப் பேய் விழுந்த வேகத்தில் அவள் தலையின் பின் புறம் பலகை அல­மா­ரியின் முனையில் கடு­மை­யாக மோதி­யதால் சுகந்தி சுய நினை­வி­ழந்தாள். சுகந்­தியின் கையில் இருந்த தொலைபேசி ரிஸீவர் தொங்­கி­ய­வாறு ஊச­லாடிக் கொண்­டி­ருந்­தது.

எங்கோ தூரத்தில் ஒரு பாரிய இடி வீழ்ந்­தது. எதிர்­பா­ராத வித­மாக இடி ஓசை கேட்ட குழந்தை விழித்து வீரிட்டு கதறி அழு­தது.

தொலை பேசியின் மறு முனையில் இருந்த தேவி சுகந்­தியின் அறையில் நடக்கும் கல­வ­ரத்தைக் கேட்டு குழப்­ப­ம­டைந்தாள். குழந்தை விழித்து வீரிட்டு கதறி அழு­வது தாங்க இய­லாமல் சுரேஷ், சுகந்தி அருகில் சென்று எழும்­புடி ! எழும்பி புள்­ளையப் பாருடி என சுகந்­தியை அதட்டி எழுப்­பினான்.

எனினும் சுகந்தி அவன் அதட்­ட­லுக்கு அஞ்சி கண் விழிக்க வில்லை. மேசை மீது சிரித்­த­வாறு இருந்த சுகந்­தியின் படம் சுரேஷைப் பார்த்துச் சிரித்­தது. என்­றாலும் சுகந்­தியின் அறையில் நடக்கும் உரை­யா­டலை, சுகந்­தியின் அறையில் மேசை­யி­லி­ருந்து தலை கீழாக தொங்­கி­ய­வாறு ஊச­லாடிக் கொண்­டி­ருந்த தொலைபேசி ரிஸீவர் மூலம், மறுமுனையில் தேவி குழம்­பிய மன­துடன் கேட்டுக் கொண்­டி­ருந்தாள்.

தேவி­யிடம் இருந்து ரிஸீ­வரை கையில் எடுத்து செவி மடுத்தார் கணவர் கணேசன். அவ­ரது முகத்தை மகன் முர­ளியும் தேவியும் கல­வ­ர­முடன் ஏறிட்டுப் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர்.

என்­றாலும் சுகந்­தியின் அறை­யி­லி­ருந்து குழந்­தையின் அழு குரலைத் தவிர கணே­ச­னுக்கு வேறு எதுவும் கேட்க வில்லை. முரளி கணே­ச­னி­ட­மி­ருந்து ரிஸீ­வரை எடுத்து தன் காதில் வைத்துக் கேட்டான்.

அவ­னுக்கும் குழந்­தையின் அழு குரலைத் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. முரளி திகி­லுடன் தாயையும் தந்­தை­யையும் பார்த்து அப்பா ! அம்மா சொன்­னதைப் பார்த்தா பேபி­யோட அழு குரலைத் தவிர வேறு எதுவும் கேட்க இல்ல. அப்­ப­டின்னா அக்­கா­வுக்கு ஏதோ நடக்கக் கூடா­தது நடந்து இருக்கு என்றான்.

சும்மா பேசிக்­கிட்­டி­ருந்தா எப்­படி ? வாங்க போய் பார்த்­துட்டு வருவோம் என்று பத­றினாள் தேவி.  நான் ரெடியாகி வர்ரேன் ! முரளி நீ காரை எடு என்றவாறே கணேசன் தனது உடையை மாற்ற அறைக்குச் சென்றார். சரி அப்பா ! என்றவாறே முரளி அங்கிருந்து அகன்றான். தேவியும் தனது இரவு உடையை மாற்றினாள்.

                                                                                                                                                                     (அடுத்த வாரம் தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!