தெற்காசிய நாடுகளில் வெள்ளம், மழையினால் 184 பேர் பலி

0 85

இந்­தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்­க­ளாதேஷ் முத­லான தெற்­கா­சிய நாடு­களில் கடும் மழை மற்றும் வெள்­ளத்­தினால் கடந்த சில தினங்­களில் குறைந்­த­பட்சம் 184 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அதி­கா­ரிகள் நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளனர்.

பாகிஸ்தான், நேபாளம், பங்­க­ளாதேஷ் மற்றும் இந்­தி­யாவின் வட மாநி­லங்­களில் பரு­வ­மழை தீவிரம் அடைந்து வரு­கி­றது. குறிப்­பாக இந்­தி­யாவின் ஹரி­யானா, அசாம், பஞ்சாப், பீகார் மற்றும் உத்­தர பிர­தேச மாநி­லங்­களில் மழை­வீழ்ச்சி அதி­க­மாக உள்­ளது. நீர்­நி­லைகள் நிரம்பி, ஆறு­களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கி­றது.

நேபா­ளத்தில் பெய்து வரும் கன­ம­ழையால், அங்­கி­ருந்த ஆறு­களில் அதி­கப்­ப­டி­யான தண்ணீர் திறக்­கப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக பீகார் மாநி­லத்தில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

நேபா­ளத்தில் 67 பேர்

நேபாளம்

 

நேபா­ளத்தில் வெள்­ளத்­தினால் குறைந்­த­பட்சம் 67 பேர் பலி­யா­கி­யுள்­ளனர் என அதி­கா­ரிகள் தெரி­வித்துள்ள­னர். வெள்­ளத்தில் மூழ்­கிய வீடு­களில் சிக்­கி­யுள்ள மக்­களை பட­குகள் மூலம் மீட்கும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்­தி­யாவில் 55 பேர்

அசாம்

 

அசாம் மற்றும் பீகாரில் மட்டும் மழை தொடர்­பான விபத்­துக்­களில் இது­வரை 55 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். உத்­த­ர­பி­தே­சத்தில் 14 பேரும், மிசோரம் மாநி­லத்தில் 5 பேரும் பலி­யாகி உள்­ளனர்.

லட்­சக்­க­ணக்­கான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பீகாரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வெளி­யேற்­றப்­பட்டு பாது­காப்­பான பகு­தி­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­தி­யாவின் தென் மாநி­ல­மான கேர­ளா­விலும் கன­ம­ழைக்­கான ரெட் அலர்ட் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. எனவே, அங்கு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இமாச்­சல பிர­தே­சத்­திலும் பல்­வேறு இடங்­களில் மழை பெய்து வரு­கி­றது. கர்சோக் பகு­தியில் அதி­க­பட்­ச­மாக 70 மிமீ மழை பதி­வாகி உள்­ளது.

பங்­க­ளா­தேஷில் 34 பேர்

பங்களாதேஷ்

 

 

பங்­க­ளா­தேஷில் வெள்­ளத்­தினால் குறைந்­த­பட்சம் 34 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கடந்த திங்­கட்­கி­ழமை 5 சிறு­வர்­களும் நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்னர் என அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். உயி­ரி­ழந்த 34 பேரில் 18 பேர் மின்னல் தாக்கி இறந்­துள்­ளனர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தானில் 28 பேர்

பாக்கிஸ்தான் காஷ்­மீர்

 

பாகிஸ்­தானின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்­மீரில் குறைந்­த­பட்சம் 28பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அங்கு சுமார் 150 வீடுகள் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் பல பகு­தி­களில் மின்­சார விநி­யோகம் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அந்தந்த நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தான் தயார் நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் நேற்றுமு;னதினம் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!