கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதியை கோடீஸ்வரன் இப்போது சந்திக்கத் தேவை இல்லை! -மாவை சேனாதிராஜா

0 384

  
                                            (ஆர்.யசி )
கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான இன்றைய (18) சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில்,  அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியமான சில உறுப்பினர்கள் வெளிப் பிரதேசங்களில் உள்ள காரணத்தினாலும் வேறு சில முக்கிய காரணங்களுக்காகவும் தாம் கலந்துகொள்ளவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்,

மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து கோடீஸ்வரன் எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரையும் கலந்துகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

  கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்தும் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் கூட்டமைப்பின் கோடீஸ்வரன் எம்.பி ஆகியோரை சந்திக்கவும் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இது குறித்து இப்போது ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

புதிய கணக்காளர் நியமிக்கப்பட்டு முதற்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியை இப்போது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையென நாம் நினைக்கின்றோம். ஆகவே கோடீஸ்வரன் எம்.பி இப்போது சந்திக்கத் தேவையில்லை என நம் கூறியுள்ளோம். அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!