அக்கரபத்தனையில் ஆற்று வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற இரு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!

0 1,206

                                                                                                                                        (ரெ.கிறிஷ்ணகாந்)
அக்கரபத்தனை, டொரிங்டன் தோட்டத்தில் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு சிறுமி காணாமல் போயுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (18) இடம்பெற்றுள்ளது

பாடசாலை விட்டு வீடு சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரும், நீரிடைப் பாதையூடாக சென்று கொண்டிருந்தபோது ஆற்று வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றுள்ளனர். நீரில் அடித்து செல்லப்பட்ட இருவரில் ஒருவரது சடலம் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய சிறுமியைத் தேடி தேடுதல் நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (படம் க. கிஷாந்தன்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!