14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டி: இலங்கை இரண்டாவது தடவையாக சம்பியன்

0 1,291

(எம்.எம்.சில்­வெஸ்டர்)

திய­கம இலங்கை – ஜப்பான் நட்­பு­றவு பேஸ்போல் மைதா­னத்தில் நடை­பெற்ற 14 அவது மேற்கு ஆசிய பேஸ்போல் இறுதிப் போட்­டியில் பாகிஸ்­தானை 5 க்கு 4 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்ட சமீர ரத்­நா­யக்க தலை­மை­யி­லான இலங்கை சம்­பி­ய­னா­னது. இதன் மூலம் இரண்­டா­வது தொடர்ச்­சி­யான தட­வை­யாக இலங்கை சம்­பியன் பட்டம் பெற்­றது.

இலங்கை சுற்­று­லாத்­துறை அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன், ஆசிய பேஸ்போல் சம்­மே­ளனம், இலங்கை பேஸ்போல் சங்கம் ஆகி­யன இணைந்து ஏற்­பாடு செய்த ஆறு நாடுகள் பங்­கேற்ற இப் போட்­டியில், நடப்புச் சம்­பி­ய­னான இலங்கை, இந்­தியா, நேபாளம் ஆகி­யன குழு ஏயிலும், பாகிஸ்தான், ஈரான், பங்­க­ளாதேஷ் ஆகி­யன குழு பியிலும் விளை­யா­டின.

லீக் சுற்றில் குழு ஏயில் முத­லிடம் பெற்ற இலங்கை, குழு பியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஈரா­னு­ட­னான அரை இறுதிப் போட்­டியில் வெற்­றி­யீட்டி இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது. மற்­றைய அரை இறதிப் போட்­டியில் குழு ஏயில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்­தி­யாவை குழு பியில் முத­லி­டத்தைப் பெற்ற பாகிஸ்தான் வெற்­றி­கொண்டு இறுதிப் போட்­டியில் விளை­யாட தகுதி பெற்­றது.

போட்­டியின் முத­லா­வது இன்­னிங்ஸில் ஆதிக்கம் செலுத்­திய இலங்கை 3 க்கு 0 என்ற ஓட்­டங்கள் அடிப்­ப­டையில் முன்­னிலை வகித்­தது. இதன் கார­ண­மாக இலங்கை அணி இல­கு­வாக வெற்­றி­பெறும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் பாகிஸ்தான் அணி திற­மை­யாக விளை­யாடி இலங்­கைக்கு சவால் விடுத்த வண்ணம் இருந்­தது.

முதல் இன்­னிங்ஸில் நவின் கஸ்;தூர முதலி, சந்துன் மது­ஷன்க, அணித் தலைவர் சமீர ரத்­நா­யக்க ஆகியோர் தலா ஒரு ஓட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.  அடுத்த நான்கு இன்­னிங்ஸ்­களில் (2 முதல் 5 வரை) இரண்டு அணி­களும் ஓட்­டங்கள் எத­னையும் பெற­வில்லை.

ஆறா­வது இன்­னிங்ஸில் இலங்கை அணி­யினர் ஓட்­டங்­களைப் பெறத் தவ­றிய அதே­வேளை பாகிஸ்தான் சார்­பாக சுமைர் சமார் ஒரு ஓட்­டத்தைப் பெற்றார். ஏழா­வது இன்­னிங்ஸில் இரண்டு அணி­க­ளாலும் ஓட்டம் பெற­மு­டி­யாமல் போனது.

எட்­டா­வது இன்­னிங்ஸில் நவீன் கஸ்­தூரி முதலி, சந்துன் மது­ஷன்க ஆகிய இரு­வரும் தலா ஒரு ஓட்­டத்தைப் பூர்த்தி செய்ய இலங்கை 5 க்கு 1 என முன்­னிலை பெற்­றது. ஒன்­ப­தா­வது இன்­னிங்ஸில் பாகி;ஸ்தான் சார்­பாக அர்ஸ்லான் ஜம்­ஷெய்தும் ஷக்கீர் அப்­றி­டியும் ஒவ்­வொரு ஓட்­டங்­களைப் பெற்­றனர்.

எனினும் இலங்கை 5 க்கு 3 என தொடர்ந்து முன்­னி­லையில் இருந்­தது.  கடை­சியும் பத்­தா­வ­து­மான இன்­னிங்ஸில் ஜவாத அலி, ரெஹ்மான், மொஹமத் ராவி ஆகியோர் இணைந்து ஒரு ஓட்­டத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­தனர்.

பாகிஸ்­தானில் 2017இல் நடை­பெற்ற 13 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் போட்டியில் முதற்தடவையாக இலங்கை சம்பயினாகியிருந்தது. இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஈரானை எதிர்கொண்ட இந்தியா 8 க்கு 1 என்ற ஓட்டங்கள் அடிப்படையில் வெற்றிகொண்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!