ஸ்ரீல. கிரிக்கெட் தலைவர் பதினொருவர் அணிக்கு நிரோஷன் திக்வெல்ல தலைவராக நியமிப்பு

0 570

பங்­க­ளா­தேஷை ஒரு நாள் கிரிக்கெட் போட்­டியில் எதிர்த்­தா­ட­வுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் பதி­னொ­ருவர் அணிக்கு நிரோஷன் திக்­வெல்ல தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இலங்­கை­யுடன் மூன்று போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்கு முன்­ப­தாக பங்­க­ளா­தே­ஷுக்கு பயிற்சிப் போட்­டி­யாக இது அமை­ய­வுள்­ளது.  இப் போட்டி பி. சர­வ­ண­முத்து ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நாளை நடை­பெ­ற­வுள்­ளது.

பங்­க­ளா­தே­ஷு­ட­னான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ருக்கு பெய­ரி­டப்­பட்­டுள்ள 22 வீரர்­களைக் கொண்ட முன்­னோடி குழாத்தில் இடம்­பெறும் 10 வீரர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் பதி­னொ­ருவர் குழாத்தில் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

பங்­க­ளா­தே­ஷுக்கு எதி­ரான தொட­ருக்­கான குழாத்தில் சேர்க்­கப்­ப­டாத ஏஞ்­சலோ பெரே­ராவும் இக் குழாத்தில் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் பதி­னொ­ருவர் குழாத்தில் நிரோஷன் திக்­வெல்ல (தலைவர்), தனுஷ்க குண­தி­லக்க, ஓஷாத பெர்­னாண்டோ, பானுக்க ராஜ­பக்ஷ, ஏஞ்­சலோ பெரேரா, ஷெஹான் ஜய­சூ­ரிய, ரமேஷ் மெண்டிஸ், தசுன் ஷானக்க, லஹிரு மது­ஷன்க, வனிந்த ஹசரங்க டி சில்வா, அக்கில தனஞ்சய, அமில அப்போன்சோ, லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ரஜித்த.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!