வியட்நாம் பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகள்: இலங்கைக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி

0 1,300

வியட்­நாமில் கடந்த வாரம் நடை­பெற்ற பகி­ரங்க மெய்­வல்­லுநர் போட்­டியில் இலங்கை 2 தங்கப் பதக்­கங்­க­ளையும், ஒரு வெள்ளிப் பதக்­கத்­தையும் சுவீ­க­ரித்­தது.

இலங்கை சார்­பாக பங்­கேற்ற ஹிமாஷ ஏஷான், சுமே­த ­ர­ண­சிங்க ஆகியோர் தங்கப் பதக்­கங்­க­ளையும், விதுஷா லக்­சானி வெள்ளிப் பதக்­கத்­தையும் கைப்­பற்­றினர்.

இப் போட்­டியில் இலங்கை சார்­பாக இந்த மூவர் மாத்­தி­ரமே பங்­கேற்­றி­ருந்தனர். ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் பங்­கேற்ற ஹிமாஷா ஏஷான் போட்டித் தூரத்தை 10.54 செக்­கன்­களில் ஓடி முடித்து தங்கப் பதக்­கத்தை வென்றார்.

ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் சுமேத ரண­சிங்க 74.58 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்­கப பதக்­கத்தை வென்றார்.

பெண்­க­ளுக்­கான முப் பாய்ச்­சலில் பங்­கேற்ற விதுஷா லக்­சானி 13.3 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்துக்கு உரித்துடையவரானார். (எம்.எம்.எஸ்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!