கோழி இறைச்சியையும், முட்டையையும் சைவமாக அறிவிக்க வேண்டும்: சிவசேனா எம்.பி கோரிக்கை

Shiv Sena MP wants chicken and eggs to be vegetarian.

0 2,454

சிவசேனா தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சைவ உணவு வகைகளாக வகைப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். 

மாநிலங்களவையில் கடந்த திங்கட்கிழமை ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகள் அடங்கிய ஆயுள் அமைச்சகத்தின் திட்டங்கள் குறித்தான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேசிய சஞ்சய் ரவுத், சிக்கன் மற்றும் கோழி முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

”நந்தர்பார் பகுதிக்கு உள்பட்ட கிராமம் ஒன்றுக்கு சென்ற போது, அங்குள்ள பழங்குடியினர் எனக்கு உணவளித்தனர். அது ஆயுர்வேத சிக்கன் என்றும் கூறினர். உடல் உபாதைகளுக்கு அது தீர்வளிக்கும் என்றும் கூறினர்’’ என்று சஞ்சய் ரவுத் குறிப்பிட்டார். 

ஆயுர்வேத உணவுகளை கொடுத்தால் கோழி ஆயுர்வேத முட்டைகளை தரும் என்றும் சஞ்சய் ரவுத் தனது உரையின் மூலம் கூறியுள்ளார்.

மேலும், ”சட்டமியற்றுபவர் கோழியை ஆயுர்வேத உணவாகக் கருதலாம், அது ஒரு சைவ உணவு உண்பதற்கு ஏற்றது, ஏனெனில் ஆயுர்வேத முட்டையிடும் கோழிக்கு ஆயுர்வேத உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, இதை சைவமாக கருதலாம்” என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இது குறித்த ஆராய்ச்சிக்காக அவர் 10,000 கோடி பட்ஜெட் கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!