ஈரானில் 17 சி.ஐ.ஏ. உளவாளிகள் கைது: சிலருக்கு மரண தண்டனை! : ஈரான் அறிவிப்பு

Iran claims arrest of 17 CIA spies; some sentenced to death

0 862

ஈரானில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் ஈரானிய அதிகாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

“ஈரானிய பாதுகாப்புப் படையினர், சி.ஐ.ஏ. உளவு வலையமைப்பு ஒன்றை வெற்றிகரமாக முறியடித்ததன் பின்னர் மேற்படி 17 பேர் கைது செய்யப்பட்டனர். 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையான காலத்தில் மேற்படி கைதுகள் இடம்பெற்றன” என ஈரானிய புலனாய்வுத்துறை அமைச்சின் உளவு முறியடிப்பு பிரிவின் தலைவர் இன்று கூறினார். அவரின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

“வேண்டுமென்றே நாட்டை காட்டிக்கொடுத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.அவர்களில் சிலருக்கு மரண தண்டனையும் சிலருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது”  என அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!