சந்திரனில் தரையிறங்குவதற்கான ‘சந்திரயான் 2’ விண்ணில் ஏவப்பட்டது
Chandrayaan-2: India launches second Moon mission
இந்தியாவின் சந்திரனை நோக்கிய இரண்டாவது செயற்கைக்கோளான ‘சந்திரயான் 2’ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி பிற்பகல் 2.43 மணிக்கு ‘சந்திரயான் 2’ தனது பயணத்தை ஆரம்பித்தது.
கடந்த 15ஆம் திகதி ‘சந்திரயான் 2’ முதன்முதலாக ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் புறப்படவதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாக தொழிநுட்பக் கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் ‘சந்திரயான் 2’க்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.