கைதானவர்கள் குறித்து அறிக்கை கோரும் சட்டமா அதிபர்!

0 139

                                              (ரெ.கிறிஷ்ணகாந்)

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை தமது அனுப்பி வைக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேரா இன்று (22) கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளார்.

 மேற்படி சம்பவம் தொடர்பில் தற்போதுவரை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எண்ணிக்கை, சந்தேக நபர்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் தற்போது நிலைவரம் ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய விளக்கமான அறிக்கையொன்றை தனக்கு அனுப்பிவைக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த அறிக்கையை நாளை 24 திகதிக்கு முன்னதாக தன்னிடம் கையளிக்குமாறு சட்ட மா அதிபர் நேற்றைய தினம் இந்த அறிவுறுத்தலை வழங்கியதாக  சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!