போதைப்பொருள் கடத்தலின் மத்திய நிலையம் வெலிக்கடை சிறைச்சாலை!- ஜனாதிபதி மைத்திரி

0 152

                                                                                                                                            (எம்.மனோசித்ரா)

கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 270 கிலோ கிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

மினுவாங்கொடை ரெஜிரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் இன்று (22)  இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தெரிவித்தாவது :அண்மையில் கடற்படையினரால் கடற்பகுதியில் 270 கிலோகிராம் போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பரிசோதனை செய்த போது அந்த நடவடிக்கை வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து நெறிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. அது தொடர்பான விசேட விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

நான் குற்றங்களுக்கு எதிராக இருப்பதால் அரசியல் துறையிலும் சமூகத்திலும் குற்றமிழைத்து வருகின்றவர்கள் எனக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள். ஊழல், மோசடி, என்பன நாட்டினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை சீரழிக்கும் அனைத்து வகையான கடத்தல் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கு தான் கடுமையான நிகழ்ச்சித்திட்டம் என்னால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே எனக்கெதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்காக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பை கைவிடப்பபோவதில்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!