ரஷ்ய இராணுவ விமானம் மீது தென்கொரிய விமானங்கள் எச்சரிக்கை வேட்டுகள்

South Korea fires warning shots at Russian military aircraft

0 257

தமது நாட்டின் வான்பரப்புக்குள் இன்று அத்துமீறி நுழைந்த ரஷ்ய இராணுவ  விமானம்  மீது எச்சரிக்கைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தனது இராணுவ விமானங்களின் மூலம் இயந்திரத் துப்பாக்கிகளினால் 360 சுற்றுகள் எச்சரிக்கைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தென்கொரிய வான்பரப்பை ரஷ்ய இராணுவ விமானங்கள் மீறியமை இதுவே முதல் தடவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்குக் கடற்­பி­ராந்­தி­யத்­தி­லுள்ள தமது நாட்டு வான்­ப­ரப்­புக்குள் இரு தட­வைகள் ரஷ்ய இரா­ணுவ விமானம் அத்­து­மீறி நுழைந்­த­தாக தென்­கொ­ரியா வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தென்­கொ­ரிய வான்­ப­ரப்பை ரஷ்ய இரா­ணுவ விமா­னங்கள் மீறி­யமை இதுவே முதல் தடவை எனவும் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

மூன்று ரஷ்ய இரா­ணுவ விமா­னங்­களும் இரண்டு சீன இரா­ணுவ விமா­னங்­களும் தென்­கொ­ரிய வான் பாது­காப்பு அடை­யாள வல­யத்­துக்குள் (KADIZ) அத்­து­மீறி வந்­தி­ருந்­த­தாக தென்­கொ­ரிய பாது­காப்பு அமைச்சு தெரி­விக்­கின்­றது. ரஷ்ய இரா­ணுவ விமா­னங்கள் மீது இரு எச்­ச­ரிக்கை வேட்­டு­களின் மூல­மான தாக்­கு­தல்­களை தென்­கொ­ரியா மேற்­கொண்­டுள்­ளது.

இரு நாட்டு விமா­னங்­களும் வேண்­டு­மென்றே தென்­கொ­ரிய வான்­ப­ரப்­புக்குள் நுழைந்­ததா என்று தெரி­ய­வில்லை.  சீன அதி­கா­ரிகள் தரப்­பி­லி­ருந்து இது குறித்து கருத்­துகள் எவையும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. எனினும், தாம் எந்­த­வொரு நாட்­டி­னதும் வான்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி நுழை­ய­வில்லை என ரஷ்யா தெரி­வித்­துள்­ளது.

சர்­வ­தேச நீர்ப்­ப­ரப்­பி­லேயே தமது பயிற்சி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­தா­கவும் எச்­ச­ரிக்கைத் தாக்­கு­தல்கள் எவையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய ரஷ்ய மற்றும் சீன தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!