வெளிநாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களை பதிவு செய்யுமாறு மருத்துவ பேரவைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1,774

வைத்திய சேவையின் பணியாற்றுவதற்கு தகுதிகாண் பரீட்சையில் சித்திபெறும், வெளிநாடுகளில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவப் பேரவைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரசன்ன ஜயவர்தன, எல்.டீ.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மருத்­துவப் பட்டம் பெற்­றுள்ள 16 மாண­வர்­களால் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரி­மைகள் மனுவின் தீர்ப்பை வழங்கி உயர்­நீ­தி­மன்றம் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ளது.

ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வெளி­நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தாம் மருத்­துவப் பட்டம் பெற்­றுள்ள போதிலும் தாம் மருத்­துவ பணியில் ஈடு­ப­டு­வ­தற்­காக பதி­வு­செய்தல், இலங்கை மருத்­துவப் பேர­வை­யினால் மறுக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­மூலம் தமது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தாக தீர்ப்­ப­ளிக்­கு­மாறும், தம்மை மருத்துப் பணிக்­காக பதி­வு­செய்­யு­மாறு இலங்கை மருத்­துவ பேரவைக்கு உத்தரவொன்றை பிறப்­பிக்­கு­மாறும் மருத்­துவப் பட்­ட­தா­ரி­க­ளான மனு­தா­ரர்கள் உயர் நீதி­மன்றில் இந்த மனுவை தாக்கல் செய்­தி­ருந்­தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!