ஸஹ்ரான் குழுவினரின் வெடிபொருட்கள் தொடர்பில் தகவல் வழங்கியவருக்கு 50 இலட்சம் ரூபா சன்மானம்

0 475

(ரெ.கிறிஷ்­ணகாந்)

உயிர்த்­த­ஞா­யிறு தினத் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய ஸஹ்ரான் குழு­வினர் தொடர்­பான தக­வல்­களை வழங்­கிய நிட்­டம்­பு­வயைச் சேர்ந்த லொறி சார­திக்கு 50 இலட்சம் ரூபாவை சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தற்கு பதில் பொலிஸ் மா அதிபர் தீர்­மா­னித்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார்.

பயங்­க­ர­வாத குழு­வினர் தொடர்­பான தகவல் வழங்­கிய தனக்கு எவ்­வி­த­மான ஊக்­கு­விப்­பு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை என அந்­ந­ப­ரது குரல் பதி­வொன்று அண்­மையில் சில ஊட­கங்கள் வாயி­லாக ஒலி­ப­ரப்­பப்­பட்­டது. அது தொடர்பில், பதில் பொலிஸ் மா அதிபர் கவனம் செலுத்­தி­யுள்ள நிலையில், மேற்­படி நபரால் முக்­கி­ய­மான இரு தக­வல்கள் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்­ந­பரால் வழங்­கப்­பட்ட தகவல் ஒன்றின் பிர­காரம், கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சம்­மாந்­துறை, செந்நெல் கிரா­மத்­தி­லுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பெருந்­தொ­கை­யான வெடி­பொ­ருட்கள் கைப்­பற்­றட்ட அதே­வேளை, அவரால் வழங்­கப்­பட்ட மற்­றொரு தக­வலின் அடிப்­ப­டையின் அதே தினத்தில் சம்­மாந்­துறை, நிந்­தவூர் பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெடி­பொ­ருட்­களும் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­ந­பரால் வழங்­கப்­பட்ட தக­வல்­களின் முக்­கி­யத்­து­வத்தை கருத்­திற்­கொண்டு ஒரு தக­வ­லுக்கு தலா 25 இலட்சம் அடங்­க­லாக இரு தக­வல்­க­ளுக்கும் மொத்­த­மாக 50 இலட்சம் ரூபாவை சன்­மா­ன­மாக வழங்­கு­வ­தற்கு பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்­ர­ம­ரத்­ன­வினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இதே­வேளை, குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய நபர்கள் தனியார் வாடகை வாகன நிறு­வ­னத்­திடம் லொறி­யொன்றை வாட­கைக்குப் பெற்று நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து சம்­மந்­துறை நோக்கி குறித்த வெடி­பொ­ருட்­களை கொண்டு சென்­றுள்­ளனர்.

தனக்கு ஏற்­பட்ட சந்­தே­கத்தில் லொறியில் ஏற்­றிச்­செல்­லப்­படும் பொருட்கள் தொடர்பில் லொறி­சா­ரதி வின­வி­ய­போது, வய­லுக்கு இடும் உரம் மற்றும் தங்க உற்­பத்­திக்கு பயன்­ப­டுத்­தப்­படும் சல்­பூரிக் அமிலம் என்­பன காணப்­ப­டு­வ­தாக பயங்­க­ர­வா­திகள் பதில் அளித்­துள்­ளனர்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்கள் ஏற்பட்டதன் பின்னர், தனது லொறியை வாடகைக்கு அமர்த்திச்சென்றவர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தில் புலனாய்வு பிரிவுக்கு தகவல் வழங்கியதாக குறித்த லொறி சாரதி அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!