பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்கிறார்

Boris Johnson becomes new PM of UK

0 153

பிரித்தானியாவின் புதிய பிரதமராக  முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சன் பதவியேற்கவுள்ளார். பிரித்தானியாவின் பிரதமராக ஆளும் கட்சியின் தலைவரே தெரிவு செய்யப்படுவார். 

இந்­நி­லையில், ஆளும் கன்­சர்­வேட்டிவ் கட்­சியின் தலைவர் பத­விக்­கான தேர்­தலில் 55 வய­தான போரிஸ் ஜோன்சன் வெற்­றி­யீட்­டி­யுள்ளார்.  கன்­சர்­வேட்டிவ் கட்­சியின் தலைவர் பத­விக்­கான தேர்­தலில் தன்னை எதிர்த்துப் போட்­டி­யிட்ட ஜெரெமி ஹன்ட்டை விட 45,497 வாக்­கு­களை அதி­க­மாகப் பெற்று போரிஸ் ஜோன்சன்  தனது வெற்­றியைப் பதிவு செய்­துள்ளார்.

கன்­சர்­வேட்டிவ் கட்­சியின் 159,320 உறுப்­பி­னர்­களில் 87.4 வீத­மானோர் இறு­திக்­கட்ட வாக்­கெ­டுப்பில் தமது வாக்­கு­களைப் பதிவு செய்­தி­ருந்­தனர்.  தற்­போ­தைய பிர­தமர் தெரெசா மே நாளை மறு தினம் உத்­தி­யோ­க ­பூர்­வ­மாக தனது பதவி வில­கலை மகா­ரா­ணி­யிடம் அறி­வித்­த­பின்னர் போரிஸ் ஜோன்சன் தனது கட­மை­களைப் பொறுப்­பேற்­றுக் ­கொள்­ள­வுள்ளார்.

போரிஸ் ஜோன்சனுக்கு ஜெரெமி ஹன்ட் வாழ்த்து தெரிவித்த போது

 

தெரெசா மே உள்­ளிட்ட தலை­வர்கள் புதிய பிர­த­ம­ருக்கு தமது வாழ்த்­து­களைத் தெரி­வித்­துள்­ளனர். தான் நிச்­சயம் பிரெக்­ஸிட்டை வழங்­குவேன் எனவும் நாட்­டுக்­காக ஒன்­றி­ணை­ய­வேண்டும் எனவும் தெரி­வித்­துள்ள போரிஸ் ஜோன்சன், எதிர்க்­கட்சித் தலைவர் ஜெரெமி கோர்­பினைத் தோற்­க­டிக்க வேண்டும் என வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

தான் பின்­வ­ரி­சையில் இருந்து புதிய பிர­த­ம­ருக்கு தனது ஆத­ரவை வழங்­க­வுள்­ள­தாக தெரெசா மே தெரி­வித்­துள்ளார்.  “அவர் 100,000த்துக்கும் குறை­வான கட்சி உறுப்­பி­னர்­களின் ஆத­ரவை மட்­டுமே அவர் பெற்­றுள்ளார்.

எமது நாட்டின் ஆத­ரவை அவர் பெற்­றுக்­கொள்­ள­வில்லை” என எதிர்க்­கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பின் குறிப்­பிட்­டுள்ளார்.  “புதிய பிர­த­ம­ராக யார் வர வேண்டும் என்­பதை பொதுத் தேர்­தலில் எமது நாட்டு மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்” எனவும் அவர் கோரியுள்ளார்.

போரிஸ் ஜோன்சன் மிகச்சிறந்தவராக இருப்பார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!