கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது!

The JDS-Congress coalition lost the trust vote in Karnataka assembly

0 968

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 14 மாதங்களாக ஆட்சி செய்து வந்த மதசார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்) மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணியின் குமாரசாமி அரசு நேற்று மாலை கவிழ்க்கப்பட்டது.

எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க கர்நாடக அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று மாலை கர்நாடக சட்டப்பேரவையில் இடம்பெற்றது.

இதன்போது ம.ஜ.த–காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனையடுத்து முதலமைச்சர் குமாரசாமி, ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!