அஜித்தின் ஆளுமை என்னை சாய்த்து விட்டது -வித்தியா பாலன்

0 112

அஜித் நடிப்பில் உருவாகும் ஹெச்.வினோத் இயக்கும் ‘பிங்க்’ திரைப்­பட ரீமேக் ஆன ‘நேர்கொண்ட பார்வை’தான் வித்யா பாலனின் முதல் நேரடி தமிழ்ப்படமாகும். ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8- ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்யா பாலன் ரீமேக் படங்களை விரும்புவதில்லை. இது சௌகரியமாக பணம் பண்ணும் ஒரு வேலை என்றே அவர் கருதி வருபவர். போனி கபூர் முதன் முதலில் ‘பிங்க்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யப்­படுவதாகக் கூறிய போது, ‘ஏன் ரீமேக்’ என்றார்.

ஆனால் தற்போது தமிழுக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ அவசியம்தான் என்பதை உணர்ந்துள்ளார்.படம் குறித்து வித்தியா பாலன் கூறும்போது,  மொழித்தடையினால் இந்திப் படம் ‘பிங்க்’-ஐ பார்க்கா­தவர்களுக்கு தமிழில் அதன் ரீமேக் ஒரு சான்ஸ­்தான்.

போனி கபூர் படத்தின் நாயகன் அஜித் என்று கூறிய போது எனக்கு உண்மையில் மகிழ்ச்சி பீறிட்டது.

அனைத்தும் சரியாக வந்திருப்பதில் மகிழ்ச்சி. என்னு­டைய முதல் படம் போனி கபூர் தயாரிக்க அஜித்துடன் நான் சக நடிகையாகியிருக்கிறேன் என்கிறார்.

படத்தில் தன் கதாபாத்திரம் பற்றி அவர் பாதுகாப்பாக பதில் அளித்தாலும், அவர் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார் என்பது திறந்த ரகசியம்தான்.

ஆனால், ‘பிங்க்’ படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் அமிதாப் மனைவி கதாபாத்திரம் எப்படி என்று.

ஆனால் வித்யா பாலன் வேறு படுகிறார்.’நேர்கொண்ட பார்வை’ இந்த விதத்தில் ‘பிங்க்’ படத்திலிருந்து வேறுபட்டது.

அதாவது என் கதாபாத்திரத்தைப் பொறுத்தமட்டில் கொஞ்சம் வேறுபட்டது.

எனக்கு பாடலும் உள்ளது. பெண்கள் ‘வேண்டாம்’ அல்லது ‘நோ’ என்றால் அது ‘நோ’ தான் என்பதை வலியுறுத்தும் ஒரு படமாதலால் இத்த­கைய ஒரு கனமான விஷயத்தைக் கொண்டு செல்ல அஜித் போன்ற மெகா ஸ்டார்கள் அவசியம் என்று உணர்கின்றேன்.

அஜித் ஒரு மெகா ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றவர். மிகப்­பெரிய ரசிகர் பட்டாளம் அவ­ருக்கு இருக்கிறது. எனவே இவரிடமிருந்து படத்தின் முக்கியமான செய்தி ஒன்று மக்களிடம் செல்லும் போது அதற்கு பரவலான வரவேற்பு இருக்கவே செய்யும் என்றார் வித்யா பாலன்.

சரி. ஒரு சக நடிகராக அஜித்தை எப்படி அவதா­னிக்கிறீர்கள் என்று கேட்டபோது,  அஜித்தின் ஆளுமை என்­னைச் சாய்த்து விட்டது.

ரசிகர்­களைத் தன் பின்னால் பெரிய அளவில் திரட்டிய ஒரு ஸ்டார் என் முன்னால் நிற்கிறார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் போன்ற ஒருவருடன் நான் இருப்பதாகவே உணர்ந்­தேன்.

என்னால் நம்ப முடிய­வில்லை. காரணம் அவர் அவ்வளவு எளிமையாக இருந்­தார்.

உண்மையில் கூறவேண்டுமென்றால் அது அஜித் அல்ல அஜித் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவருடன் தான் நடிக்கிறோம் என்றே நினைத்தேன்.

அவ்வளவு எளிமை­யானவராக அவர் இருக்கிறார். ‘தல’ இமேஜ் பற்றி அவரிடம் நான் பேசிய போது அவர் உண்மையில் கூச்சப்பட்டார்” என்றார் வித்யா பாலன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!