நான் நடிகையாக அறியப்பட விரும்புகிறேன்; கதாநாயகியாக அல்ல! – ஷ்ரத்தா ஸ்ரீநாத்

0 179

நடி­கை­யா­கத்தான் அறி­யப்­பட வேண்­டுமே தவிர கதா­நா­ய­கி­யாக அல்ல என ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரி­வித்­துள்ளார்.தமிழில் இவன் தந்­திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினி­மாவில் அறி­முகம் ஆனவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

அடுத்­த­தாக மாதவன் ஜோடி­யாக அவர் நடித்த விக்ரம் வேதா திரைப்­படம் நல்ல பெயரை பெற்றுத் தந்­தது.தற்­போது, இந்தி, மலை­யாளம், தமிழ், தெலுங்கு, கன்­னடம் என பல மொழி­க­ளிலும் பிசி­யாக இருக்­கிறார்.தமிழில் உரு­வாகும் அஜித் நடிக்கும் நேர் கொண்ட பார்வை படத்தில், முக்­கிய கதா­பாத்­தி­ரத்தில் நடித்­தி­ருக்­கிறார்ஷ்ரத்தா.

இந்­தியில் வெளியான பிங்க் படத்தின் திரைப்­பட ரீமேக்­கான இந்த படத்தில், டாப்சி நடித்த வேடத்தில் நடித்­துள்ளார்.

மீரா என்ற கதா­பாத்­தி­ரத்தில், தனது உரி­மைக்­காக போராடும் பெண்­ணாக நடித்­துள்ளார்.

இந்தப் படத்தில் நடி­கைகள் வித்யா பாலன், பிக் பாஸ் அபி­ராமி மற்றும் ஆண்ட்­ரியா நடித்­துள்­ளனர்.

இத­னி­டையே கதா­நா­யகி என கூறு­வதை கண்டு தான் பயப்­ப­டு­வ­தாக தெரி­வித்­தி­ருக்­கிறார்.

கதா­நாயன், கதா­நா­யகி என்ற வார்த்­தைகள், நடிகர் – நடி­கையர் என்ற வார்த்­தைக்கு ஈடா­காது.

கதா­நா­யகன் என்றால், சண்டை காட்­சி­களில் அடித்து நொறுக்க வேண்டும்.

கதா­நா­யகி என்றால் கிளா­ம­ராக இருக்க வேண்டும். ஹீரோ­வுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும்.

நான் அப்­படி இருக்க விரும்­ப­வில்லை.

நடிகை என்றால், கதா­பாத்­தி­ரத்தை தோற்­றத்தில் கொண்டு வந்து நிறுத்­து­ப­வ­ராக இருக்க வேண்டும்.

கதா­நா­யகி என்ற வார்த்­தையே எனக்கு பய­மு­றுத்­து­வ­தாக இருக்­கி­றது.

நடி­கை­யாக இருக்­கவே நான் விரும்­பு­கிறேன்.

இருந்த போதும், கதா­நா­யகி என்ற வார்த்­தையை நான் விரும்­பா­ம­லேயே பயன்­ப­டுத்தி வரு­கிறேன் என்­கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!