அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் டேன் கோட்ஸ் பதவி விலகினார்

Dan Coats: US intelligence chief leaves Trump administration

0 157

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவரான டேன் கோட்ஸ் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

டேன் கோட்ஸ் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பதவி விலகவுள்ளதுடன், டெக்ஸாஸ் மாநில பிரதிநிதியான ஜோன் ரெட்கிளிஃப் அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் வட கொரிய விவகாரத்தில் கோட்ஸ் மற்றும் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தன.

சி.ஐ.ஏ உள்ளிட்ட அமெரிக்காவின் 17 புலனாய்வு அமைப்புகளை மேற்பார்வை செய்யும் பணியை கோட்ஸ் மேற்கொண்டிருந்தார்.

ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து பதவிவிலகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் ஜேம்ஸ் மாட்டிஸ் மற்றும் வெளியுறவு செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் ஆகியோரின் வரிசையில் டேன் கோட்ஸ் தற்போது இணைந்துள்ளார்.

தனது இரண்டரை வருடகால பதவிக்காலத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு முன்னெப்போதையும் விட தற்போது பலமானதாக இருப்பதாக ட்ரம்ப்புக்கு அனுப்பிவைத்துள்ள ராஜினாமா கடிதத்தில் டேன் கோட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!