பிரேஸில் சிறைச்சாலையில் குழுக்களுக்கிடையில் மோதல்: 57 பேர் பலி!

Brazil jail riot in Para state leaves 57 dead as gangs fight

0 415

பிரேஸில் சிறைச்சாலையொன்றில் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலினால் 57 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாரா மாநிலத்திலுள்ள அல்டமிரா சிறைச்சாலையில் சிறைச்சாலை தொகுதியொன்றில் இருந்த ஒரு குழுவினர் மற்றொரு பகுதியை ஆக்கிரமித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்ட இரு அதிகாரிகள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு ஆரம்பமான மோதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நீடித்தது.

16 பேர் தலை துண்டிக்கப்பட்டு இறந்துள்ளதுடன், எஞ்சியோர் சிறைச்சாலையின் ஒருபகுதி தீ வைக்கப்பட்ட நிலையில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். இக்கலவரம் தொடர்பாக எந்தவிதமான முன்னெச்சரிக்கைகளோ அல்லது அறிகுறிகளோ காணப்படவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அல்டமிரா சிறைச்சாலையில் 200 கைதிகளையே தடுத்து வைக்க முடியும். எனினும் சம்பவதினத்தன்று 309 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அளவுக்கதிகமான கைதிகள் தடுத்துவைக்கப்பட்டார்கள் எனும் கூற்றை அதிகாரிகள் மறுத்துள்ளனர். உலகின் மூன்றாவது அதிக எண்ணிக்கையான 700,000 சிறைக்கைதிகளைக் கொண்ட நாடு பிரேஸில் ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!