பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விமானம் வீழ்ந்ததில் 17 பேர் பலி

Pakistan military plane crash kills 17 in Rawalpindi suburb

0 1,220

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியொன்றில் இராணுவ விமானமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 விமானப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 12 பேர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 12 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

வழமையான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இரா­ணுவ தலை­மை­யகம் அமைந்­துள்ள காரிஸன் நகரின் மொரா கலு கிராமப் பகு­தியில் விபத்து இடம்­பெற்­றது.
பாரிய சத்­தத்­துடன் விமானம் வீழ்ந்து வெடித்­த­துடன், பாரிய தீப்­ப­ர­வ­லும் ஏற்­பட்­டி­ருந்­தது.

நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் இவ்­வி­பத்து இடம்­பெற்­ற­தாக மொஹம்மட் சாதிக் என்னும் அப்­ப­குதி குடி­யி­ருப்­பாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

“நான் பாரிய வெடிப்புச் சத்­த­மொன்றைக் கேட்டு எழுந்தேன். வெளியே வந்து பார்த்­த­போது அப்­ப­கு­தியில் பாரிய தீப்­பி­ழம்­புகள் ஏற்­பட்­டதைக் கண்டோம். உட­ன­டி­யாக அவ்­வி­டத்­துக்கு விரைந்தோம்.

மக்கள் கூக்­கு­ர­லிட்­டனர். தீ அதி­க­மாக இருந்­ததால் எங்­களால் எதுவும் செய்­ய­மு­டி­ய­வில்லை. ஒரே குடும்­பத்தை சேர்ந்த 7 பேர் இறந்­துள்­ளனர். பெரும்­பா­லானோர் தீயில் சிக்­கியே இறந்­தனர்” என அவர் கூறி­யுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி ஆரிஃப் அல்வி உள்ளிட்ட பலரும் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!