அமெரிக்காவின் ‘கெப்பிட்டல் வன்’ நிதி நிறுவனத்தின் 10 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு

Capital One data breach: Arrest after details of 106m people stolen

0 1,591

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த ‘கெப்­பிட்டல் வன்’ எனும் நிதி நிறு­வ­னத்தின் 10 கோடிக்கும் அதி­க­மான (106 மில்­லியன்) வாடிக்­கை­யா­ளர்­களின் தனிப்­பட்ட தக­வல்கள் திரு­டப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது. வாடிக்­கை­யா­ளர்­களின் பெயர்கள், முக­வ­ரிகள் மற்றும் தொலை­பேசி இலக்­கங்கள் உள்­ளிட்ட தக­வல்கள் திரு­டப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வனம் தெரி­விக்­கி­றது.

வங்­கி­யியல் வர­லாற்றில் இது மிகப்­பெ­ரிய தகவல் திருட்­டாக இருக்கும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. தகவல் திருட்டில் ஈடு­பட்ட சியாட்­டிலைச் சேர்ந்த மென்­பொருள் பொறி­யி­ய­லா­ள­ரான பேக் தொம்ஸன் (33) எனும் பெண் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, கட­னட்டை கணக்கு இலக்­கங்­களை தகவல் திரு­டி­ய­வரால் அணுக முடி­யாது என குறித்த நிதி நிறு­வனம் குறிப்­பிட்­டுள்­ளது.  ‘கெப்­பிட்டல் வன்’ அமெ­ரிக்­காவின் பாரிய கட­னட்டை வழங்­கு­ந­ராக இருப்­ப­துடன், சில்­லறை வங்கிச் சேவை­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

சுமார் 10 கோடி (100 மில்­லியன்) அமெ­ரிக்க வாடிக்­கை­யா­ளர்­களின் தக­வல்­களும் 60 இலட்சம் (6 மில்­லியன்) கனே­டிய வாடிக்­கை­யா­ளர்­களின் தக­வல்­களும் திரு­டப்­பட்­டுள்­ள­தாக நேற்று முன்­தினம் அந்­நி­று­வனம் அறி­வித்­தி­ருந்­தது.

அத்­துடன் 140,000 இர­க­சிய இலக்­கங்­களும் 80,000 வங்­கிக்­க­ணக்கு இலக்­கங்­களும் திரு­டப்­பட்­டுள்­ளன. கன­டாவில் ‘கெப்­பிட்டல் வன்’ நிதி நிறு­வ­னத்தின் கட­னட்­டை­க­ளுடன் தொடர்­பு­பட்ட 1 மில்­லியன் காப்­பு­றுதி இலக்­கங்­களும் கள­வா­டப்­பட்­டுள்­ளன.

ஜூலை மாதம் 19ஆம் திகதி இந்த தகவல் திருட்டு அடை­யாளம் காணப்­பட்­டது. பேக் தொம்ஸன் மீதான வழக்கு விசா­ர­ணைகள் சியாட்டில் நீதி­மன்­றத்தில் நாளை இடம்­பெ­ற­வுள்­ளன. தகவல் திருட்டு குறித்து அவர் இணை­யத்­தள குழு­வொன்றில் பெருமையாகப் பேசியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அவருக்கு அதிகபட்சமாக 5 வருட சிறைத்தண்டனையும் 250,000 டொலர்கள் (4 கோடி இலங்கை ரூபா) அபராதமும் விதிக்கப்படலாம்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!