8,200 கோடி ரூபா சொத்து கொண்ட இந்திய தொழிலதிபர் வி.ஜி. சித்தார்த் சடலமாக மீட்பு

Cafe Coffee Day Owner's Body Found By River 2 Days After He Went Missing

0 1,452

இந்தியாவின் பிரபல ‘கஃபே காபி டே’ என்ற நிறுவனத்தின் உரிமையாளரான வி.ஜி. சித்தார்த் காணாமல் போயிருந்த நிலையில் 36 மணிநேரத் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனாவார்.

2015ஆம் ஆண்டில் அவரது சொத்து மதிப்பு 8200 கோடி இந்திய ரூபா என ஃபோர்பஸ் சஞ்சிகையினால் மதிப்பிடப்பட்டிருந்தது.
கர்நாடகாவிலிருந்து மங்களூரு செல்வும் வழியிலுள்ள ஆற்றில் அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. 

கடந்த திங்கட்கிழமை பெங்களூரிலிருந்து சக்லேஷ்பூர் நோக்கி தனது சாரதி பசவராஜ் பாட்டீலுடன் சென்றுள்ளார். அதன்போது மங்களூருக்கு திருப்பும்படி அவர் சாரதியைக் கேட்டுள்ளார்.

மங்களூரை நெருங்கியபோது நேத்ராவதி ஆற்றுப்பாலத்தை நெருங்கியபோது வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து இறங்கி சுமார் 1 கி.மீ நீளமான குறித்த பாலத்தில் தனியாக மறுமுனை நோக்கி சென்றுள்ளார். அதன்பின்னரே அவர் காணாமல் போயிருந்தார்.

சித்தார்த்தின் குடும்பம் 130 வருடங்களாக காபி தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் 1996ஆம் ஆண்டில் ‘கஃபே காபி டே’ நிறுவனத்தை ஆரம்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!