அமைச்சர் ரிஷாத்திடம் துப்பாக்கி கேட்ட செல்வம் அடைக்கலநாதன் எம்.பி!

0 1,506

                                                                               (கதீஸ், ஓமந்தை நிருபர்)
வவுனியா அபிவிருத்திகுழுக் கூட்டம் இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது அண்மைக் காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன்கள் (துப்பாக்கி) மீளப் பெறப்பட்டுள்ளதால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே அவர்களுக்கு மீண்டும் சொட்கன் (துப்பாக்கிகள்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவசக்தி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுதீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் என அனுமதி பெறவேண்டும் என தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அந்த விண்ணப்பத்தை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ‘தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம்’ என நகைச்சுவையாக தெரிவித்தார். இதன்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ‘பழைய ஞாபகங்கள் வந்துள்ளது போல்’ என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!