பொலிவூட் பாடகர் பாட்ஷாவின் பாகல் வீடியோ 24 மணித்தியாலங்களில் 7.5 கோடி தடவைகள் பார்வையிடப்பட்டது; சாதனைக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை (வீடியோ)

0 327

பொலிவூட் பாடகர் பாட்ஷா வெளியிட்ட பாகல் எனும் பாடல் வீடியோ யூரியூப் இணை­யத்­த­ளத்தில் வெளியாகி 75 மில்­லியன் (7.5 கோடி தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது. இது புதிய உலக சாத­னை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.எனினும், இந்தச் சாத­னைக்­கான அங்­கீ­காரம் பாட்­ஷா­வுக்கு இன்னும் கிடைக்­க­வில்லை.

33 வய­தான ரெப் பாடகர் பாட்­ஷாவின் உண்­மை­யான பெயணர் ஆதித்யா பிரதீக் சிங் சிசோ­தியா ஆகும்.2004ஆம் ஆண்டு முதல் ஹிந்தி, பஞ்­சாபி உட்­பட பல மொழி­களில் இவர் பாடி­யுள்ளார். பெரும் எண்ணிக்­கை­யான பொலிவூட் திரைப்­ப­டங்­க­ளிலும் இவர் பாடல்­களைப் பாடி­யுள்ளார்.

போர்ப்ஸ் சஞ்­சி­கை­யினால் தயா­ரிக்­கப்­பட்ட, இந்­திய இசைத்­து­றையின் 100 மிகப் பெரிய செல்­வந்­தர்­களின் பட்­டி­யலில் பாடகர் பாட்­ஷாவும் இடம்­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.தென் கொரிய இசைக்­கு­ழு­வான பி.ரி.எஸ். கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி வெளியிட்ட போய் வித் லவ் எனும் வீடியோ 24 மணித்­தி­யா­லங்­களில் 74.6 மில்­லியன் (7.46 கோடி) தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­ட­பட்­டி­ருந்­தது.

24 மணித்­தி­யா­லங்­களில் அதிகம் பார்­வை­யி­டப்­பட்ட வீடி­யோ­வாக இந்த வீடியோ அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கின்னஸ் சாதனை நூல் வெளியீட்­டா­ளர்­க­ளாலும் இந்தச் சாதனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில், இந்­திய ரெப் பாடகர் பாட்­ஷாவின் பாகல் வீடியோ கடந்த 10 ஆம் திகதி யூரி­யூப்பில் வெளியி­டப்­பட்டு 24 மணித்­தி­யா­லங்­களில் 75 மில்­லியன் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டது.

இதன்­படி, யூரி­யூப்பில் 24 மணித்­தி­யா­லங்­களில் அதிகம் பார்க்­கப்­பட்ட வீடி­யோ­வாக பாகல் வீடியோ அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். பொது­வாக யூரியூப் இணை­யத்­த­ளத்தில் இத்­த­கைய சாத­னை­க­ளின்­போது, சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு யூரியூப் பாராட்டுத் தெரி­விப்­பது வழக்கம்.

நேற்றுவரை 118.5 மில்­லியன் (18.5) கோடி தட­வைகள் இவ்­வீ­டியோ பார்­வை­யி­டப்­பட்­டி­ருந்­தது.ஆனால், பாடகர் பாட்­ஷாவின் பாகல் வீடியோ குறித்து இது­வரை யூரியூப் கருத்து எத­னையும் தெரி­விக்­க­வில்லை.

பார்வை எண்­ணிக்­கை­களை போலி­யாக அதி­க­ரிப்­ப­த­தற்­கான உபா­யங்­களை பாடகர் பாட்ஷா கையாண்­டுள்­ள­தாக இந்­தி­யா­வி­லுள்ள அவரின் போட்டியாளர்கள் விமர்சிக்கின்றனர். பாட்ஷாவும் அவரின் பிரதிநிதிகளும் கூகுள் விளம்பரங்களை வாங்கி, அதில் தமது வீடியோவை பதித்து வெளியிட்டுள்ளனர் என பாட்ஷாவின் போட்டியாளர்கள் கூறுகின்றனர். 

வீடியோ:

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!