பிளைபோர்ட் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தார் பிராங்கி ஸபாதா

Flyboarding Frenchman Franky Zapata crosses Channel

0 1,740

பிரான்ஸை சேர்ந்த கண்டுபிடிப்பாளரான பிராங்கி ஸபாதா, ‘பிளைபோர்ட்’ (flyboard) எனும் ஜெட் பவர் இயந்திரத்தின் மூலம் பறந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் இச்சாதனையை படைத்ததார்.

40 வயதான பிராங்கி ஸபாதா ((Franky Zapata) நீண்டகாலமாக பிளைபோர்ட் பறக்கும் சாதனைத்தை மேம்படுத்துவதில் ஈடுபட்டு வருபவர்.

கடந்த மாதம் தனது பிளைபோர்ட் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சித்தபோதிலும், அவர் கடலில் வீழ்ந்து, அம்முயற்சியி தோல்வியுற்றது.

பிரான்ஸிலிருந்து புறப்பட்டபோது…

இந்நிலையில், இன்று அவர் வெற்றிகரமாக ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்தார்.

பிரான்ஸின் வடக்கிலுள்ள கரையோர நகரான சங்காட்டாவிலிருந்து இன்று காலை தனது பயணத்தை ஆரம்பித்த பிராங்கி ஸபாதா இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள டோவர் நகரின் சென் மார்கரெட் குடாவில் சென்றிறங்கினார்.

இங்கிலாந்தின் டோவர் நகரில் தரையிறங்கும்போது…

இதனால். பிளைபோர்ட் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் மனிதர் எனும் சாதனைக்குரியவராகியுள்ளார்

30 கிலோமீற்றர் (22மைல்) தூரத்தை அவர் 20 நிமிடங்களில் சென்றடைந்தார்.  நீர்ட்டத்திலிருந்து சுமார்  15-20 மீற்றர்கள் ((50-65) அடி உயரத்தில் பிளைட்போட் மூலம் பறந்தார்.  அவருக்குப் பாதுகாப்பாக ஹெலிகொப்டர்கள் பறந்தன.

நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் பிராங்கி ஸபாதா
பிராங்கி ஸபாதா 
 
கடந்த மாதம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது பதிவுசெய்யப்பட்ட வீடியோ:
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!