‘நாவினால் சுட்ட வடு ஆறாது’ ; பிக்பொஸ் வீட்டிலிருந்து சரவணனின் வெளியேற்றம் சொல்லும் பாடம்

0 1,111

ஏ.எம். சாஜித் அஹமட்

பிக்பொஸ் வீட்டில் யாருமே எதிர்­பார்க்­காத நொடியில் பிக்பொஸ் வீட்டில் திடீர் திருப்­ப­மான சம்­பவம் நடந்­தே­றி­விட்­டது.

சுமார் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் பிக்பொஸ் வீட்டில் இருப்­ப­வர்­க­ளிடம் கமல் பேசிக் கொண்­டி­ருக்கும் போது சர­வணன் ஒரு வார்த்தை சொல்­லி­வி­டுவார். தன்­னு­டய கல்­லூ­ரிக்­கா­லங்­களில் பஸ்ஸில் பய­ணிக்கும் போது பெண்­களை உர­சி­ய­தாக அவர் கூறினார்;
அந்த சம­யத்தில் மீரா, சேரன் விவ­காரம் மும்­மு­­ரமாய் பேசப்­பட்­டி­ருந்­ததால் இதனை கமல் கவ­னித்­தி­ருக்­க­வில்லை.

பிறகு சமூக வலைத்­த­ளங்­களில் இவ்­வார்த்தை பூதா­க­ர­மாகி வெடிக்கத் தொடங்­கி­யது. பலரும் சர­வ­ணனின் வார்த்­தைக்கு எதி­ராக போர்க் கொடி தூக்­கினர்.

பொதுப்­புத்­தியில் சர­வணன் பேசு­வ­தா­கவும், இவ்­வார்த்தை மிகுந்த கண்­ட­னத்­திற்கு உரி­யது எனவும் குரல் எழுப்­பினர். மாபெரும் குற்­றச்­சாட்­டாக இவ்­வார்த்தை முன்­வைக்­கப்­பட சர­வ­ணனும் பகி­ரங்­க­மாக மன்­னிப்­பினை கேட்டார்.

தீயினால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவினால் சுட்ட வடு எனும் வள்­ளு­வனின் வாக்­கிற்கு ஏற்ப சர­வ­ணனின் வாயி­லி­ருந்து வெளி­வந்த கர்மா அவரை விடாது துரத்­தி­யது.

உல­கத்தின் மூலை­மு­டுக்­கு­க­ளிலும் வாழ்­கின்ற தமிழ் பேசும் மக்­களின் பொழுது போக்கு நிகழ்­வு­களில் பிக்பொஸ் பெருத்த இடத்­தினை பிடித்­தி­ருக்­கி­றது. மிக அதி­க­மான பெண்­களும் பிக்பொஸ் நிகழ்ச்சி பார்க்­கி­றார்கள்.

வெளிப்­படை அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருக்கும் கமல்­ஹா­ஸ­னுக்கு இவ்­வார்த்­தையின் விப­ரீதம் பின்­புதான் மண்­டையில் உறைத்­தது.

பெண்­களின் சுதந்­தி­ரத்­திற்­கா­கவும், அடக்­கு­மு­றைக்­கா­கவும் பலரும் பல மட்­டத்தில் தங்­க­ளது போராட்­டங்­களை நிகழ்த்திக் கொண்­டி­ருக்க, சர­வ­ணனின் இக்­க­ருத்­தினை யாரும் ஏற்றுக் கொள்­வ­தற்கு துணி­ய­வில்லை.

கமலின் எதிர்­கால அர­சியல் கன­விற்கு சர­வணன் முற்­றுப்­புள்ளி வைத்து விடு­வாரோ என அஞ்சும் அள­விற்கு பூகம்­பமாய் மாறி­விட்­டது சர­வ­ணனின் வார்த்தைக் கோலம்.

பிக்பொஸ் வீட்டில் உள்ள யாருக்கும் தெரி­யாமல், சர­வ­ண­னினை கொன்­பெஷன் அறைக்குள் அழைத்து, நீங்கள் பெண்கள் விட­யத்தில் கூறிய கருத்து மர­ணப்­ப­டுக்­கை­யிலும் மன்­னித்து விட முடி­யாது கண்­ம­ணியே என்று கூறி­ய­படி அறைக்கு பின்­னாடி உள்ள கதவின் வழியே வெளியே எடுத்து விட்­டார்கள்.

பின்பு எல்­லோரும் சர­வ­ண­னினை தேடி அலைந்­தனர். ‘சித்­தப்பு’ என்று செல்­ல­மாக அழைக்­கப்­படும் சர­வணன் எங்கே மறைந்து விட்டார் எனும் அதிர்ச்­சியில் பிக்பொஸ் வீடு தேடுதல் சிந்­த­னைக்குள் மூழ்­கி­யி­ருந்­தது.

அப்­போது வழ­மை­யான அச­ரீ­ரியில் சில கார­ணங்­க­ளுக்­காக பிக்பொஸ் வீட்­டினை விட்டு சர­வணன் வெளி­யேற்­றுப்­பட்டு விட்டார் எனும் செய்தி அறி­விக்­கப்­பட்­டதும் அனை­வரும் அதிர்ந்து விட்­டனர்.

சர­வ­ண­னோடு மிகவும் நட்­பாக பழ­கிய சாண்­டி­யினால் இத்­துன்­பத்­தினை தாங்க முடி­ய­வில்லை. ஓ வென்று அழத் தொடங்கி விட்டார். கவி­னுக்கும் சர­வ­ணனின் இழப்பு பேரி­டி­யா­கவே வந்து வீழ்ந்­தி­ருக்­கி­றது.   

தமிழ் பிக்பொஸ் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக பிக்பொஸ் வீட்டில் இப்­ப­டி­யொ­ருவர் வெளி­யேற்­றப்­பட்­டி­ருக்­கிறார். இதனால் வார்த்­தை­களை வெளியே வீசு­கின்ற போது மிக அவ­தா­ன­மா­கவும், நுணுக்­க­மா­கவும் வெளி­யிட வேண்டும் என்­பது தெளி­வா­கி­றது.

பிக்பொஸ் வீட்­டிற்கு வந்த நாளி­லி­ருந்து வெளியே போக வேண்­டு­மென நினைத்­தவர் சர­வணன். பிறகு நாட்கள் செல்லச் செல்ல வீட்டில் இருப்­ப­வர்­க­ளுடன் நன்கு பழ­கி­யவர். அவரும் சற்று எதிர்­பார்த்­தி­ருக்க மாட்டார் தனக்கு இப்­படி ஒரு நிலை ஏற்­படும் எனவும், திடீ­ரென வெளி­யேற்­றப்­ப­டுவேன் என்­ப­தையும் யூகித்­தி­ருக்க மாட்டார். ஆனாலும் வாய் இருந்தால் வங்­காளம் போகலாம் என்­பார்கள்.

இன்று சர­வ­ணனின் வாய் அவரை பிக்பொஸ் வீட்­டி­லி­ருந்து நோமி­னேஷன் ஆகா­மலே வெளி­யி­றக்க வைத்து விட்­டது. இப்­படி வார்த்­தை­களை விட்டு வம்பில் மாட்டிக் கொண்­ட­வர்­களின் வர­லா­றுகள் மிகவும் நெடி­யது.

இன்னும் பிக்பொஸ் வீட்டில் இருப்­ப­வர்­க­ளுக்கு சர­வணன் ஏன் வெளி­யேற்­றப்­பட்டார் எனும் உண்மை நில­வரம் தெரி­யாது. இதற்­கான காரணத்தினை சூட்சுமமாகவோ, வெளிப்படையாகவோ எதிர்வரும் வாரத்தில் கமல் வந்து பேசுவார். அந்த மேடையில் சரவணனும் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எது எப்படியோ சரவணனின் இழப்பு பிக்பொஸ் வீட்டாளர்களுக்கு பேரிழப்பு. ஆனால் சரவணனின் வார்த்தைகளின் விபரீதம் அறிந்த உலகத்தாருக்கு பிக்பொஸ் நிகழ்வு தக்க பாடம்.

வெள்ளிக்கிழமை இதழில் சநதிப்போம்…

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!