இரட்டையர்கள் தின விழாவில்…

0 1,661

இரட்­டை­யர்கள் தின விழா அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தில் கடந்த வார இறு­தியில் கொண்­டா­டப்­பட்­டது.

1976 ஆம் ஆண்டு முதல் இரட்­டை­யர்கள் தின விழா (Twins Days Festival ஒஹையோ மாநி­லத்தில் வரு­டாந்தம் கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது. இக்­கொண்­டாட்டம் நடை­பெறும் நகரின் பெயர் டுவின்ஸ்பர்க் (Twinsburg) ) என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1976 ஆம் ஆண்டு நடை­பெற்ற கொண்­டாட்­டத்தில் 36 ஜோடி இரட்­டை­யர்கள் கலந்­து­கொண்­டனர். தற்­போது உலகின் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இரட்­டை­யர்கள் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­று­கின்­றனர்.

உலகின் மிகப் பெரிய இரட்­டையர் ஒன்­று­கூடல் நிகழ்­வாக இது விளங்­கு­கி­றது.ஒரே சூலில் 3 குழந்­தை­க­ளாக பிறந்­த­வர்களும், 4 குழந்­தை­க­ளாக பிறந்­தவ­ர்­களும் இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றி­யமை குறிப்பிடத் தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!