இரகசிய அறை யாருக்கு? கமலின் சக்கர வியூகம் பிக்பொஸ் வீட்டில் ஆரம்பம்

0 1,563

– ஏ. எம். சாஜித் அஹமட் –

சர­வ­ணனின் வெளி­யேற்­றத்­துக்குப் பிறகு பிக்பொஸ் வீட்டில் அனை­வரும் கதி­க­லங்கிப் போனார்கள். இது­வ­ரைக்கும் எந்தக் கார­ணத்­திற்­காக சர­வணன் வெளி­யேற்­றப்­பட்டார் என்­பது பிக்பொஸ் வீட்­டி­லி­ருக்கும் யாருக்கும் தெரி­யாது

பிக்பொஸ் வீட்டை விட்டு வெளி­யே­றிய சர­வணன் இன்னும் வெளி­யுல­கத்­திற்கு வர­வில்லை.

வார இறுதி நாட்­களில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக சர­வ­ணனை மேடைக்கு அழைத்து கமல் வெளி­யேற்றம் செய்­வாரா? அல்­லது மீண்டும் சர­வணன் பிக்பொஸ் வீட்­டினுள் உள்­வாங்­கப்­ப­டு­வாரா? என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

அபி­ராமி, லொஸ்­லியா, சாக்ஷி இவ்­வாரம் நோமி­னேஷன் லிஸ்டில் இருக்­கி­றார்கள். திடீ­ரென சர­வணன் வெளி­யேற்­றப்­பட்­டதால் இவ்­வாரம் இரண்டு நபர்­களை பிக்பொஸ் வீட்டை விட்டு வெளி­யேற்­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடக்­கலாம். இதற்­கான வாய்ப்­புகள் மிகக் குறை­வா­கவே இருக்­கி­றது.

இவ்­வாரம் இடை­ந­டுவே சர­வணன் வெளி­யேற்­றப்­பட்­டி­ருப்­பதால் நோமி­னேஷன் லிஸ்டில் உள்­ள­வர்கள் காப்­பாற்­றப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உண்டு. இப்­பொ­ழுது கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் தன் கையே தனக்கு உதவி எனும் டாஸ்கில் எல்­லோரும் அதிக கரி­சனை எடுத்­தி­ருக்­கி­றார்கள். கவின், சாண்டி, சேரன், மது­மிதா, லொஸ்­லியா, சாக்ஷி, அபி­ராமி, ஷெரின் என எல்­லோரும் உற்­சா­கத்­துடன் விளை­யா­டு­கி­றார்கள்.

சர­வ­ணனின் வெளி­யேற்­றத்­திற்குப் பிறகு பிக்பொஸ் வீட்டில் உள்ள அனை­வரும் ஒரு­வித பயம் தொற்­றி­யி­ருக்­கி­றது. பிக்பொஸ் டாஸ்கில் அனை­வருக்கும் விட்டுக் கொடுப்­புடன் மிகவும் நிதா­ன­மாக நடந்து கொள்­கி­றார்கள்.லிவிங் ஏரி­யாவில் உள்ள தண்ணீர் தொட்­டியில் கைவிட்டு உள்ளே இருந்து ஒரு வட்­டத்­தினை எடுக்க வேண்டும். அவ்­வட்­டத்தில் எழு­தி­யி­ருக்­கும்­படி செய்ய வேண்டும் என்­பது பிக்பொஸ் விதி.

ஒவ்­வொ­ருத்­தரும் அதனை எடுக்கும் போது மற்­ற­வர்­க­ளுடன் முரண்­பட்டுக் கொள்­ளாமல் சமா­த­ான­மாக தங்­க­ளு­டைய டாஸ்க் புள்­ளி­களை பிரித்துக் கொள்­கி­றார்கள்.  பிறகு எல்லா ஆண்­க­ளுக்கு பெண்கள் வேடமும், எல்லாப் பெண்­க­ளுக்கு ஆண்கள் வேடமும் போட்டு பிக்பொஸ் வீட்டில் உள்­ள­வர்­களைப் போன்று நடித்துக் காட்ட வேண்டும் என பிக்பொஸ் சொல்­கிறார்.

சேரனைப் போன்று வேஷ­மிட்ட மது­மிதா சேர­னா­கவே வாழ்ந்து நடித்­தி­ருந்தார். முகினின் வேஷ­மிட்ட அபி­ரா­மியும் கலக்­க­லா­கவே தனது பாத்­தி­ரத்­தினை செய்­தி­ருந்தார். மிகவும் அமை­தி­யாக பிக்பொஸ் வீடு நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. தர்­ஷ­னுக்கும் ஷெரி­னுக்­கு­மி­டை­யே­யான உரசல் இன்னும் சில நாட்­களில் பூகம்­ப­மாக மாறலாம். ஆனால் இப்­பொ­ழுது எவ்­வித ஆர்ப்­பாட்­டமும் இல்­லாமல் அமை­தியா போகி­றது பிக்பொஸ்.

இப்­படி அமை­தி­யா­கவும், எவ்­வித சச்­ச­ர­வு­க­ளு­மின்றி ஒரே மேசையில் அமர்ந்து லாவ­க­மாக உணவு உண்­ப­தினை மக்­களும் விரும்­ப­மாட்­டார்கள், கமலும் விரும்ப மாட்டார். ஆக, அடுத்த வாரத்­தி­லி­ருந்து பிக்பொஸ் வீடு வேறு வித­மான தீ பற்றி எரியும்.

சென்ற வாரம் நோமி­னேஷன் ஆன­வர்­க­ளுக்­கான வாக்கு வேட்டை மும்­மு­ரமாக செய­ற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வாரம் லொஸ்­லியா அல்­லது சாக்ஷி வெளி­யேற்­றப்­பட்டால் இர­க­சிய அறையை கமல் பயன்­ப­டுத்த முயற்­சிக்­க­க்கூடும்.

அதிலும் சா­க்ஷிதான் இர­க­சிய அறைக்கு ரொம்­பவும் பொருத்­த­மா­னவர். சா­க்ஷி­யினை வெளியே எடுத்து ரக­சிய அறையில் வைத்தால் கவி­னுக்கும் லொஸ்­லி­யா­வுக்­கு­மான ஊடல் அதி­க­ரிக்கும். இதனை இர­க­சிய அறை­யி­லி­ருந்து பார்த்துக் கொண்­டி­ருப்பார் சாக்ஷி.

கவி­னி­ட­மி­ருந்தோ, லொஸ்­லி­யா­வி­ட­மி­ருந்தோ சாக்ஷி பற்­றிய ஏதா­வது வார்த்­தைகள் வெளிப்­ப­டு­மாயின், அந்த நொடி ரக­சிய அறை­யி­லி­ருந்து வீட்டின் உள்ளே சாக்ஷி அனுப்­பப்­ப­டுவார். அதற்குப் பிறகு பிக்பொஸ் வீடு ரண­க­ள­மாக மாறும். இதற்­கான இடை­வெ­ளி­யி­னைத்தான் கமல் துருவித் துருவி தேடிக் கொண்­டி­ருக்­கிறார்.

இப்­போ­தைக்கு பிக்பொஸ் வீட்டில் புதி­தாக உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான பிரச்­சி­னைகள் ஏதும் வெளிப்­ப­டையாய் தோன்­ற­வில்லை. கடி­ன­மான டாஸ்­கு­களை வைத்து முரண்­பா­டு­களின் தோற்­றத்­தினை நிகழ்த்­தலாம் என கமல் நினைக்­கிறார். ஆனாலும் விட்டுக் கொடுப்­பு­கள்தான் பிக்பொஸ் வீட்டில் அதி­கமாய் இருக்­கி­றது.

நிலைமை இவ்­வாறு நீடித்தால் நாட்கள் செல்ல செல்ல டாஸ்கின் கடினம் அதி­க­மாகும். நோமி­னே­ஷ­னுக்­கான டாஸ்­குகள் வைக்­கப்­படும் போது வீட்டில் உள்ளே எல்­லோரும் டாஸ்­கினை வெற்­றி­க­ர­மாக செய்­வ­தற்­காக அதிகம் போரா­டு­வார்கள். இந்த போராட்­டத்தில் பல­ம­னக்­க­சப்­புகள் உரு­வா­கு­வ­தற்­கான வாய்ப்­புகள் நிறை­யவே உள்­ளன. பிக்பொஸ் வீட்டில் எதனை போட்டால் எப்­படி வெடிக்கும் என்­பதை கமல் தெளி­வாகச் செய்வார்.

இவ்­வா­ரத்தின் இறு­தியில் கமலின் வருகை அதி­க­மாக எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சர­வ­ணனின் வெளி­யேற்றம் பற்­றியும், அதற்குப் பின்னால் இருக்­கின்ற சூட்­சு­மங்கள் பற்­றியும் கமல் பேசுவார் என அனை­வரும் காத்­தி­ருக்­கின்­றனர்.

நோமி­னேஷன் செய்­யப்­பட்­ட­வர்­களில் யார் வெளி­யேற்­றப்­படப் போகி­றார்கள், யார் காப்­பாற்­றப்­படப் போகி­றார்கள் என்­பதில் எல்­லோ­ருக்கும் குழப்­ப­மி­ருக்­கி­றது. இனி எவ்­வா­றான கட்­ட­ளை­களை கமல் பிக்பொஸ் வீட்டில் உள்­ள­வர்­க­ளுக்கு சொல்லப் போகிறார் என­பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கமலின் வரு­கைக்குப் பிற­குதான் பிக்பொஸ் வீட்டில் உள்­ள­வர்கள் அமை­தி­ய­டை­வார்கள். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்­டினை விட்டு யார் சென்­றாலும் அழு­கையும், துக்­கமும் வானினை நிரப்பும். கமல் ஈவி­ரக்­க­மின்றி தனது திட்­டத்­தினை மிகத் தெளி­வாக நிறை­வேற்­றுவார்.

பிக்பொஸ் பார்க்­கின்ற அனை­வரையும் டுவிஸ்டில் மாட்டிக் கொண்டு திகி­ல­டைய வைப்­பதே கமலின் பிர­தான நோக்கம். அந்த நோக்­கத்­திற்­காக கமல் எந்த எல்­லைக்கும் செல்வார். ஏனெனில் கமல் பண்பட்ட மகா கலைஞன்.

(தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!