வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 9: 1945- நாகசாகி நகரின் மீது அணுகுண்டுத் தாக்குதல்

0 381

கி.மு. 48 : ஜூலியஸ் சீசர் இத்­தா­லிய குடி­ய­ரசின் படைத்­த­ள­பதி பம்­பீயை சமரில் தோற்­க­டித்தார்;. பம்பீ எகிப்­துக்கு தப்பி ஓடினார்.

378 : ரோமப் பேர­ரசர் வேலென்ஸ் தலை­மை­யி­லான பெரும் படை எகிப்தில் தோல்­வி­ய­டைந்­தது. அர­சரும் அவரின் அரைப்­பங்கு படை­யி­னரும் கொல்­லப்­பட்­டனர்.

1945: நாகசாகி நகரின் மீது அணுகுண்டுத் தாக்குதல்

1048 : 23 நாட்­களே பத­வியில் இருந்த பின்னர் பாப்­ப­ரசர் இரண்டாம் டமாசஸ் இறந்தார்.

1173 : பைஸா நகரின் சாயும் கோபு­ரத்தின் கட்­டிட வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இது இரு நூற்­றாண்­டு­க­ளுக்குப் பின்­னரே முடி­வுற்­றது.

1655 : ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்­கி­லாந்தை ஒன்­பது மாகா­ணங்­க­ளாகப் பிரித்தார்.

1842 : ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் கன­டா­வுக்கும் இடையில் ரொக்கி மலை­களின் கிழக்குப் பகு­தியில் எல்­லை­க­ளுக்­கான உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

1892 : தோமஸ் அல்வா எடிசன் தனது இரு­வழி தந்­திக்­கான காப்­பு­ரி­மையைப் பெற்றார்.

1902 : 7 ஆம் எட்வேர்ட் ஐக்­கிய இராச்­சி­யத்தின் மன்­ன­னாக முடி­சூ­டினார்.

1907 : இங்­கி­லாந்தில் பிறெ­ளன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்­பிக்­கப்­பட்ட சார­ணிய இயக்­கத்தின் முதல் பாசறை முடி­வ­டைந்­தது.

1936: ஜேர்­ம­னியில் நடை­பெற்ற ஒலிம்பிக் போட்­டி­களில் அமெ­ரிக்க குறுந்­தூர ஓட்ட வீர­ரான ஜெஸி ஒவென்ஸ் 4 தங்­கப்­ப­தக்­கங்­களை வென்று, இச்­சா­த­னையை படைத்த முதல் அமெ­ரிக்­க­ரானார்.

1942 : வெள்­ளை­யனே வெளி­யேறு| இயக்­கத்தை ஆம்­பித்­த­மைக்­காக மகாத்மா காந்தி உட்­படப் பல இந்­திய காங்­கிரஸ் தலை­வர்கள் பம்­பாயில் கைது செய்­யப்­பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப் போர்: ஜப்­பா­னிய நக­ரான நாக­சாக்­கியின் மீது ஐக்­கிய அமெ­ரிக்கா அணு­குண்டு வீசி­யது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் அதே இடத்தில் கொல்­லப்­பட்­டனர். உலகில் இடம்­பெற்ற இரண்­டா­வதும் இறு­தி­யு­மான அணு­குண்­டுத்­தாக்­குதல் இது­வாகும்.

1965 : மலே­ஷியக் கூட்­ட­மைப்பில் இருந்து சிங்­கப்பூர் பிரிந்து தனி நாடா­கி­யது.

1965 : அமெ­ரிக்­காவின் ஆர்­கன்சாஸ் மாநி­லத்தில் டைட்டான் ஏவு­கணைத் தளத்தில் இடம்­பெற்ற தீ விபத்தில் 53 தொழி­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1974 : வோட்­டர்கேட் ஊழல் விவ­கா­ரத்­ததால் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்சன் பதவி வில­கினார்.

1991 : யாழ்ப்­பா­ணத்தில் விடு­தலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்­பித்த ஆனை­யி­றவு இரா­ணுவ முகாமின் மீதான தாக்­குதல் முடி­வுக்கு வந்­தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2013: பாகிஸ்தானின் குவேட்டா நகரில் பள்ளிவாசலொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் பலியானதுடன் 30 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!