மங்கள்யான் விண்வெளித் திட்டம் தொடர்பான ‘மிஷன் மங்கள்’ திரைப்படம்

0 573

அக் ஷய் குமார் ஹீரோ­வாக நடிக்கும் ‘மிஷன் மங்கள்’ திரைப்­படம் எதிர்­வரும் 15 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை வெளி­யா­க­வுள்­ளது.

இந்­தி­யா­வினால் 2013 ஆம் ஆண்டு செவ்வாய் கிர­கத்­துக்கு வெற்­றி­க­ர­மாக அனுப்­பப்­பட்ட மங்­கள்யான் விண்­கலத் திட்­டத்தில் பணி­யாற்­றிய விஞ்­ஞா­னி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட திரைப்­படம் இது.

வித்யா பாலன்

 

இப்­ப­டத்தில் அக்ஷய் குமா­ருடன், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி, நித்யா மேனன், கீர்த்தி குல்­ஹரி ஆகியோர் நடித்­துள்­ளனர்.

கீர்த்தி குல்­ஹரி

 

ஜெகன் சக்தி இப்­ப­டத்தை இயக்­கி­யுள்ளார். இப்­ப­டத்தின் புதிய ட்ரெய்லர் கடந்த வியா­ழக்­கி­ழமை வெளி­யா­கி­யது.இந்­திய சுதந்­திர தினத்தை முன்­னிட்டு எதிர்­வரும் 15 ஆம் திகதி இப்­படம் வெளி­யாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நித்யா மேனன், டாப்ஸி

 

மிஷன் மங்கள் படத்தின் ஊக்­கு­விப்­புக்­காக மும்­பையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­றிய வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி, நித்யா மேனன்.கீர்த்தி குல்ஹரி ஆகியோரை படங்களில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!