வெள்ளையராகப் பிறந்தமைக்காக வெட்கப்படுகிறேன் –நடிகை ரொசானா

0 692

வெள்­ளை­ய­ராக பிறந்­த­மைக்­காக தான் வெட்­கப்­ப­டு­வ­தாக ஹொலிவூட் நடிகை ரொசா­னா­அர்குட் தெரி­வித்­துள்ளார்.

நடிகை, இயக்­குநர், தயா­ரிப்­பாளர் என பல முகங்­களைக் கொண்­டவர் ரொசானா அர்குட்.

59 வய­தான அவர் 1978 முதல் ஏரா­ள­மான திரைப்­ப­டங்­க­ளிலும் தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் நடித்­தவர்.

பல விரு­து­க­ளையும் அவர் வென்­றுள்ளார். இந்­நி­லையில், கடந்த புதன் கிழமை  டுவிட்­டரில் அவர் வெளி­யிட்ட பதி­வொன்றில், வெள்­ளை­யராக பிறந்­த­மைக்­கா­கவும் தனிச்­ச­லுகை பெறு­வ­தற்­கா­கவும் வருந்­து­கிறேன்.

இது எனக்கு வெறுப்­பூட்­டு­கி­றது. இதற்­காக நான் மிகவும் வெட்­கப்­ப­டு­கி­றேன’ எனத் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவில் கூட்­டுப்­ப­டு­கொ­லை­களைச் செய்த துப்­பாக்­கி­தா­ரிகள் அனை­வரும் வெள்ளையினப் பயங்கரவாதிகளாகவே உள்ளனர்’ எனவும் நடிகை ரொசானா தெரிவித்திருந்தார்.  

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!