கடந்த வாரம் 180 மில்லியன் டொலர்களை வசூலித்த ஹோப்ஸ் அன்ட் ஷா திரைப்படம்

0 583

பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ் திரைப்­பட வரி­சையில் புதிய வெளி­யீ­டான ஹோப்ஸ் அன்ட் ஷா (Hobbs & Shaw) திரைப்­படம் முதல் வார இறு­தியில் 180 மில்­லியன் டொலர்­களை வசூ­லித்­துள்­ளது.

ட்வைன் ஜோன்சன், ஜேசன் ஸ்டெதாம

 

அதி வேக காரோட்­டங்­க­ளுக்குப் பிர­சித்தி பெற்ற திரைப்­பட வரிசை பாஸ்ட் அன்ட் பியூரிஸ். இப்­ப­டத்தின் 8 ஆவது அத்­தி­யாயம் 2017 ஆம் ஆண்டு வெளி­யா­கி­யது. 9 ஆவது திரைப்­படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளி­யாகும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையில் பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ் திரைப்­பட வரி­சையின் ஓர் உப தயா­ரிப்­பாக (ஓவ் ஸ்பின்) ஹோப்ஸ் அன்ட் ஷா படம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.  வழக்­க­மாக பாஸ்ட் அன்ட் பியூ­ரியஸ் படங்­களில் நடிக்கும் வின் டீசல் ஹோப்ஸ் அன்ட் ஷா படத்தில் நடிக்­க­வில்லை. ட்வைன் ஜோன்சன், ஜேசன் ஸ்டெதம், இத்ரிஸ் எல்பா, வனேசா கேர்பி, ஹெலின் மிரென், எலிஸா கொன்­சாலெஸ். ஏடி மார்சன் முத­லானோர் இப்­ப­டத்தில் நடித்­துள்­ளனர்.

இப்­ப­டத்தில், ஜேசன் ஸ்டாதமின் (ஷா) தங்கை வனேசா ஒரு இர­க­சிய பொலிஸ் உள­வாளி. உலகை அழிக்கும் வல்­லமை உள்ள வைரஸை எடுக்க செல்­கிறார் வனேசா. இதேபோல் வில்­லனும் வைரஸை எடுக்க முயல்­கிறார். இந்த வேளையில் வைரஸை கண்­டு­பி­டிக்கும் வனேசா, அதை தனது உடலில் ஏற்­றிக்­கொள்­கிறார்.

ஆனால் சூழலை மாற்றும் வல்­லமை படைத்த வில்லன், பொலிஸ் முக­வ­ரான வனேசா வைரஸை திரு­டி­விட்­ட­தாக பழி சுமத்­து­கிறார்.  இதனால் வனே­சா­விடம் உள்ள வைரஸை மீட்க பொலிஸ் அதி­கா­ரி­யான ட்வைன் ஜோன்சன் (ஹாப்ஸ்) நிய­மிக்­கப்­ப­டு­கிறார். அவரின் உத­வி­யா­ள­ராக ஜேசன் ஜேசன் ஸ்டெதம் (ஷா) செல்­கிறார்.

எதி­ரெதிர் துரு­வங்­க­ளான இரு­வரும் எப்­போதும் சண்டை போட்­டுக்­கொள்ளும் குண­மு­டை­ய­வர்கள். முதலில் இணைந்து பணி­யாற்ற மறுக்கும் இரு­வரும் பின்னர் இணைந்து பணி­யாற்ற சம்­மதம் தெரி­விக்­கின்­றனர். அப்­போது வைரஸை திரு­டி­யது தனது தங்கை என்­ப­தையும், அவள் மீது வீண் பழி சுமத்­தப்­பட்­டுள்­ள­தையும் அறி­கிறார் ஜேசன் ஜேசன் ஸ்டெதம் (ஷா).

ட்வைன் ஜோன்சன், எலிஸா கொன்சாலெஸ்.

 

தன்­னிடம் உள்ள சக்தி மூலம் ட்வைன் ஜோன்சன் (ஹாப்ஸ்) மற்றும் ஜேசன் ஸ்டாதம் (ஷா) மீது பழி சுமத்­து­கிறார் வில்லன். இதை­ய­டுத்து வனே­சா­விடம் உடம்பில் உள்ள வைரஸை எடுத்­தார்­களா, வில்­லனின் சூழ்ச்­சியில் இருந்து தப்­பித்­தார்­களா என்­பதே இப்­ப­டத்தின் கதை.

டேவிட் லெட்ச் இயக்­கிய இப்­ப­டத்தை யூனி­வர்ஸ்சல் பிக்சர்ஸ் நிறு­வனம் விநி­யோ­கித்­துள்­ளது. அமெ­ரிக்­காவில் கடந்த 2 ஆம் திகதி இப்­படம் வெளி­யாகி 60 மில்­லியன் டொலர்­களை வசூ­லித்­தது. வெளி­நா­டு­களில் 120 மில்­லியன் டொலர்­களை வசூ­லித்­தது.

கடந்த வார இறு­தியில் இப்­படம் உல­க­ளா­விய ரீதியில் 180 மில்­லியன் டொலர்­களை (சுமார் 3,185 கோடி ரூபா) வசூ­லித்து கடந்த வார வசூல் பட்­டி­ய­லிலில் முதல் இடத்தைப் பெற்­றி­ருந்­தது. சீனாவில் எதிர்­வரும் 23 ஆம் திக­தியே இப்­படம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை லயன் கிங் படம் கடந்த வார வசூல் பட்டியலில் இரண்டாம் இடத்தையும், வன்ஸ் அப்போன் ஏ டைம் இன் ஹொலிவூட் படம் 3 ஆவது இடத்தையும் பெற்றிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!