பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடருக்கான பாதுகாப்பு: இலங்கை குழுவினர் சென்று ஆராய்ந்தனர்

0 48

கராச்சி தேசிய விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்ள கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து ஆராயும் பொருட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் செய­லாளர் மொஹான் டி சில்வா தலை­மை­யி­லான ஐந்து பேர் கொண்ட குழு­வினர் பாகிஸ்தான் சென்­றி­ருந்­தனர்.

அங்கு மத்­திய பொலிஸ் அலு­வ­ல­கத்தில் பொலிஸ் மாஅ­திபர் கலா­நிதி கலீம் இமாமை சந்­தித்த இலங்கை குழு­வினர் பாது­காப்பு ஏற்­பா­டுகள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யுனர்.

பாது­காப்பு நட­வ­டிக்­கைகள், தந்­தி­ரோ­பாய உத்­திகள், பாகிஸ்­தா­னுக்கும் இலங்­கைக்கும் இடையில் தலை­ந­கர பெரும்­பா­கத்தில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள கிரிக்கெட் தொடர் என்­பன தொடர்­பாக இந்தச் சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

கடந்த காலங்­களை விட சட்­டமும் ஒழுங்கும் இயல்பு நிலைக்கு திரும்­பி­யுள்­ள­தாக பாகிஸ்தான் பொலிஸ் மாஅ­திபர் தெரி­வித்தார்.

சர்­வ­தேச தரத்­துக்கு ஏற்ப அதி உய­ரிய பாது­காப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு வழங்­கப்­படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன பிர­தி­நி­தி­க­ளிடம் அவர் உறுதி அளித்தார்.

பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து மொஹான் டி சில்வா தனது திருப்­தியை வெளி­யிட்­ட­தாக பாகிஸ்தான் பொலிஸ் பேச்­சாளர் ஒருவர் கூறினார்.

இக் கூட்­டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சர்­வ­தேச கிரிக்கெட் செயற்­பாட்டுப் பணிப்­பாளர் ஸக்கிர் கான் தலை­மை­யி­லான ஐவர் அடங்­கிய குழு­வி­னரும் கலந்­து­கொண்­டனர். 

இவர்­க­ளை­விட பாகிஸ்தான் உள்­துறை செய­லாளர், இலங்கை தூதரக பிரதிநிதி உட்பட ரேஞர்ஸ் மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!