வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 12: 1985- ஜப்பானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதால் 520 பேர் பலி

0 93

கிமு 30: மார்க் அந்­தோனி போரில் தோல்­வி­ய­டைந்­ததை அடுத்து எகிப்­திய ராணி கிளி­யோ­பெட்ரா தற்­கொலை செய்து கொண்டார்.

1281: மொங்­கோ­லியப் பேர­ரசன் குப்ளாய் கானின் கடற்­ப­டை­யினர் ஜப்­பானை அணுகும் போது சூறா வ­ளியில் சிக்­குண்டு இறந்­தனர்.

1985: ஜப்பானில் இரு விமானங்கள் மோதிக்கொண்டதால் 520 பேர் பலி

1833: அமெ­ரிக்­காவின் சிக்­காகோ நகரம் அமைக்­கப்­பட்­டது.

1851: ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்­தி­ரத்­துக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

1853: நியூ ஸிலாந்து சுயாட்சி பெற்­றது.

1877: அசாப் ஹோல் என்­பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்­தி­ரனைக் கண்­டு­பி­டித்தார்.

1883: கடைசி குவாகா (வரிக்­கு­திரை வகை) ஆம்ஸ்­டர்­டாமில் இறந்­தது.

1914: முதலாம் உலகப் போர்: பிரித்­தா­னியா ஆஸ்­தி­ரி­யா-­ ஹங்­கே­ரி­யுடன் போரை அறி­வித்­தது. பிரித்­தா­னிய இராச்­சி­யதின் அனைத்து குடி­யேற்ற நாடு­களும் இதனுள் அடங்­கின.

1952: மொஸ்­கோவில் 13 யூத இன அறி­வி­ய­லா­ளர்கள், கவி­ஞர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1953: சோவியத் ஒன்­றியம் ஜோ 4 என்ற தனது முத­லா­வது அணு­வா­யுதச் சோத­னையை நடத்­தி­யது.

1960: எக்கோ ஐ என்ற முத­லா­வது தொலைத்­தொ­டர்பு செய்­மதி ஏவப்­பட்­டது.

1964: தென் ஆபி­ரிக்க அரசின் இன­வெறிக் கொள்கை கார­ண­மாக அந்­நாடு ஒலிம்­பிக்கில் விளை­யாடத் தடை விதிக்­கப்­பட்­டது.

1978: ஜப்­பானும் மக்கள் சீனக் குடி­ய­ரசும் தமக்­கி­டையே நட்­பு­றவு, அமைதி ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தின.

1981: ஐபிஎம் தனி­நபர் உப­யோகக் கணினி வெளி­யி­டப்­பட்­டது.

1985: ஜப்­பானில் இரண்டு பய­ணிகள் விமா­னங்கள் மோதிக் கொண்­டதில் 520 பேர் கொல்­லப்­பட்­டனர். 4 பேர் காப்­பாற்­றப்­பட்­டனர்.

1985: தமிழ்ப் போராளிக் குழுக்­க­ளுக்கும் இலங்கை அர­சுக்கும் இடையில் 2ஆம் கட்ட திம்புப் பேச்­சு­வார்த்­தைகள் ஆரம்­ப­மா­யின.

1990: அம்­பாறை, வீர­மு­னையில் நானூ­றுக்கும் மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1990: அமெ­ரிக்கா, தென் டகோட்­டாவில் டிரன்­னொ­சோரஸ் என்னும் டைனோசரின் முழு­மை­யான எலும்­புக்­கூடு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

2005: லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டார்.

2000: கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்­படை நீர்­மூழ்கிக் கப்பல் பயிற்­சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்­கி­யது.

2005: இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் லக் ­ஷ்மன் கதிர்­காமர் கொழும்பில் அவ­ரது வீட்டில், நீச்சல் தடா­கத்தில் நீராடும் போது சுடப்­பட்டு அடுத்த நாள் இறந்தார்.

2005: மாலை தீவு­களில் அர­சுக்­கெ­தி­ராக கிளர்ச்சி இடம்­பெற்­றது.

2015: சீனாவின் தியாஜின் நகரில் களஞ்­சி­ய­சா­லை­யொன்றில் இடம்­பெற்ற இர­சா­யன கொள்­கலன் வெடிப்­பினால் 173 பேர் உயிரிழந்தனர்.

2018: சிரி­யாவின் இட்லிப் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்­களின் ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் ஏற்­பட்ட வெடிப்புச் சம்­ப­வத்தில் சுமார் 50 பொது­மக்கள் உட்­பட 67 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!