பொத்துவில் அஸ்மின் வரிகளில், சுருதி பிரபாவின் இசையில் உருவாகிவரும் சாதனைப்பாடல்! 30 பேர் பாடினர்

0 1,224

தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக முன்­னேற்றம் மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சின் வழி­காட்­டலின் கீழ் இந்து சமய கலா­சார திணைக்­க­ளத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் தமிழர் பாரம்­ப­ரிய மற்றும் நவீன கலை­க­ளுக்கு பங்­க­ளிப்பு செய்து வரும் தமிழ் கலை­ஞர்­க­ளுக்­கான அரச விருது விழா வெகு விரைவில் மிக பிர­மாண்­ட­மான முறையில் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதில் இலங்­கையில் கலைத்­து­றைக்கு ஒரு தசாப்த காலத்­துக்கும் மேலாக பங்­க­ளிப்பு செய்­து­வரும் மூத்த, இளம் படைப்­பா­ளிகள் விருது வழங்கி கெள­ர­விக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

இலங்­கையில் அதிக எண்­ணிக்­கை­யான தமிழ்க் கலை­ஞர்கள் அர­சாங்­கத்­தினால் பாராட்­டப்­ப­ட­வி­ருப்­பது இதுவே முதல் முறை­யாகும்.

கொழும்பு தாமரைத் தடாகம் கலை அரங்கில் அமைச்சர் மனோ கணேசன் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்த நிகழ்­வுக்­கான கருப்­பா­டலை பிர­பல கவி­ஞரும் தமிழ் திரைப்­பட பாட­லா­சி­ரி­ய­ரு­மான பொத்­துவில் அஸ்மின் எழு­தி­யுள்ளார்.

தமிழ் சினி­மாவில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­யுள்ள இலங்கை இசை­ய­மைப்­பாளர் சுருதி பிர­பாவின் இசையில் இலங்­கையில் மிகவும் பிர­ப­ல­மான மூத்த, இளம் பாடகர், பாட­கிகள் சுமார் 30 பேர் இணைந்து இப்­பா­டலை பாடி­யுள்­ளனர்.

இலங்­கையில் அதிக எண்­ணிக்­கை­யான தமிழ் கலை­ஞர்கள் இணைந்து ஒரு பாடலை பாடு­வது இதுவே முதல் முறை­யாகும். இது இலங்கை தமிழ் இசைத்­து­றையில் ஒரு சாதனை என்றே கூறப்­ப­டு­கி­றது.

பாடல் ஒலிப்­ப­திவு பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள ஒலிப்­ப­திவு கூடத்தில் அண்­மையில் இடம்­பெற்­றது.

இலங்­கையில் முக்­கி­ய­மான பிர­பல கலை­ஞர்கள் அனை­வரும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள இப்­பாடல் உலக தமிழ் இசை ரசி­கர்கள் மத்­தியில் கொண்டு செல்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வருகின்றன.

“தமிழ் எம் உயிர் என்­போமே” என்ற கருப் பாடல் அரச கலைஞர் விருது விழா மேடையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யி­டப்­ப­ட­வி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!