எக் ஷன் ஹீரோவாகும் யோகி பாபு

0 40

நான் ஹீரோவாக நடிக்கவே மாட்டேன். என் பலம் எனக்குத் தெரியும் என்று சொல்லிக்கொண்­டிருந்த யோகி பாபு இன்றைய நிலவரப்படி 5 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘காதல் மோதல் 50/50’.

மற்ற படத்திற்கும் இதற்கும் உள்ள ஒரு வித்திசாயம் இது பேய்படமாக இருந்தாலும் இதில் எக் ஷன் அவதாரம் எடுக்கிறார் யோகிபாபு.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தை தயாரிக்­கும் லிபிசினி கிராப்ட் நிறு­வனத்தின் சார்பில் மு.மாறன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

அலெக்சாண்டர் எழுதிய கதையை கிருஷ்ணா சாய் இயக்குகிறார்.

சண்டை இயக்குநர் பில்லா ஜெகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த சண்டை காட்சிகள் சமீபத்தில் பிரமாண்ட ஷெட் போட்டு அதில் படமாக்கப்பட்டது.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!