தமிழில் நிராகரிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன் -வித்யா பாலன்

0 839

தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவிட்டார்.

அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார்.

இது பற்றி வித்யா பாலன் கூறும்போது,‘நேர்கொண்ட பார்வை படத்தில் கௌரவ வேடம் என்றாலும் நல்ல டீமுடன் பணியாற்றியது மறக்க முடியாது.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அஜித், ரொம்பவும் எளிமையானவர்.

இதற்கு முன் ‘கபாலி’, ‘காலா’ படங்களில் ரஜினியுடன் நடிக்க மறுத்ததாக சொல்கிறார்கள்.

காலா படத்துக்கு என்னிடம் யாரும் பேசியதில்லை. ‘கபாலி’ வாய்ப்புதான் எனக்கு வந்தது.

அந்த சமயத்தில் இந்தி படத்தில் பிஸி­யாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

ஆரம்பத்தில் மாதவனுடன் ‘ரன்’ படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர்.

டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப்பட்டேன்.

‘மனசெல்லாம்’ படத்திலும் அதேபோல் நிராகரிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து போனது.

பின்னர் இந்தி சினிமாவில் அறிமுகமாகி எனது கெரியர் மாறியது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!