நட்சத்திர ஹோட்டலில் 102 நாட்கள் தங்கிய நபர் 12 இலட்சம் ரூபா கட்டணத்தை செலுத்தாமல் தலைமறைவு

0 370

இந்­தி­யாவின் ஹைத­ரா­பாத்தில் உள்ள தாஜ் பஞ்­சாரா நட்­சத்­திர ஹோட்­டலில் 102 நாட்கள் தங்­கிய நபர் ஒருவர் 12 இலட்சம் ரூபா கட்­ட­ணத்தை செலுத்­தாமல் தலை­ம­றை­வா­கி­யுள்ளார் என முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தெலுங்­கானா மாநி­லத்தின் ஹைதரா­பாத்தில் பஞ்­சாரா ஹில்ஸ் பகு­தியில் உள்­ளது தாஜ் பஞ்­சாரா நட்­சத்­திர ஹோட்டல். சமீ­பத்தில், இந்த ஹோட்­டலில் தொழி­ல­திபர் ஒருவர் தங்­கி­யுள்ளார்.

இவர் மொத்தம் 102 நாட்கள் அந்த ஹோட்­டலில் தங்கி உள்ளார். இதற்­கான கட்­டணம் 25.96 லட்சம் இந்­திய ரூபா­வாகும். கடந்த ஏப்ரல் மாதம், 13.62 இலட்சம் ரூபாவை செலுத்­தினார். மீத­முள்ள தொகையை பின்னர் தரு­வ­தாக கூறி­யுள்ளார்.

இதனை ஹோட்டல் நிர்­வாகம் நம்­பி­யது. எனினும், மேற்­படி தொழி­ல­திபர். இத­னை­ய­டுத்து ஒருநாள் யாரி­டமும் சொல்­லாமல் ஹேட்­டலில் இருந்து தப்பிச் சென்­றுள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.குறித்த நபரை காண­வில்லை என்­ற­வுடன், ஹோட்டல் நிர்­வாகம் அவரை போன் மூலம் தொடர்பு கொண்­டுள்­ளது. ஆனால், பலன் கிடைக்­க­வில்லை.

இதை­ய­டுத்து தாஜ் பஞ்­சாரா ஹோட்டல் நிர்­வாகம் உட­ன­டி­யாக பொலி­ஸாரிடம் புகார் கொடுத்­துள்­ளது. இதன் அடிப்படையில் பொலிஸார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!