நீண்ட நடைப்பயணம் செய்து படம்பிடித்ததாகக் கூறினார் யுவதி; அது தமது வீட்டின் பின்புறம் என்பதை அம்பலமாக்கினார் சகோதரி

0 918

நீண்ட தூர நடைப்­ப­யணம் செல்­லும்­போது பிடிக்­கப்­பட்­ட­தாகக் கூறி புகைப்­ப­ட­மொன்றை வெளி­யிட்ட யுவதி பொய் கூறு­கிறார் என்­பதை அவரின் சொந்த சகோ­த­ரியே அம்­ப­ல­மாக்­கி­யுள்ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் பிர­பல்­ய­மா­கு­வ­தற்­காக பலர் தமது புகைப்­ப­டங்­களை வெளி­யி­டு­வதில் அதிக ஆர்வம் காட்­டு­கின்­றனர்.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த கெய்ஸி சோஸ்­நோவ்ஸ்கி எனும் யுவதி, தான், ஹைக்கிங் எனும் நீண்ட நடைப்­ப­யணம் செய்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் எனத் தெரி­வித்து, புகைப்­ப­ட­மொன்றை இன்­ஸ­டா­கிராம் சமூக வலைத்­த­ளத்தில் அண்­மையில் வெளி­யிட்­டி­ருந்தார்.

எனினும் கெய்ஸி சோஸ்­நோவ்ஸ்கி அவ்­வாறு நீண்ட நடைப்­ப­யணம் எதுவும் செய்­ய­வில்லை எனவும், அப்­பு­கைப்­படம் தமது வீட்டின் பின்­பு­றத்­தி­லேயே பிடிக்­கப்­பட்­டுள்­ளது எனவும், கெய்ஸி சோஸ்நோவ்ஸ்கியின் சொந்த சகோதரியான கேர்லி சோவ்ஸ்நோஸ்கி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!