வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் 13: 2010 : 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல் கனடாவை அடைந்தது

0 102

கி.மு. 3114: மாயா நாட்­காட்டி தொடங்­கப்­பட்­டது.

1415: நூறு ஆண்டுப் போர்: இங்­கி­லாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் 8000 பேருடன் பிரான்ஸை அடைந்தான்.

1516: புனித ரோமப் பேர­ரசன் ஐந்தாம் சார்ள்ஸ் நேப்பிள்;ஸையும் பிரான்ஸின் முதலாம் பிரான்ஸிஸ் மிலா­னையும் உரிமை கொண்­டாட இரு நாடு­க­ளுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

2010: 492 இலங்கையர்களுடன் எம்.வீ. சன் ஸீ கப்பல் கனடாவை அடைந்தது

1536 : ஜப்­பானில் கியோட்­டோவில் உள்ள என்­றி­யாக்கு கோயிலின் பௌத்த மத­கு­ருக்கள் 21 நிச்­சிரன் கோயில்­களைத் தீக்­கி­ரை­யாக்­கினர்.

1792: பிரான்ஸின் மன்னன் 16 ஆம் லூயி தேசிய விசா­ரணைக் குழு­வினால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைது செய்­யப்­பட்டு, மக்­களின் எதி­ரி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டான்.

1868: பெரு நாட்டில் இடம்­பெற்ற பூகம்­பத்­தினால் சுமார் 25,000 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1913: ஹரி பிறி­யர்லி துருப்­பி­டிக்­காத உருக்கை கண்­டு­பி­டித்தார்.

1920: போலந்து, சோவியத் ஒன்­றியம் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் போர் ஆரம்ப­மா­னது. ஆகஸ்ட் 25 இல் முடி­வ­டைந்த இப்­போரில் சோவியத் செம்­ப­டை­யினர் தோல்­வி­யுற்­ற­னர்.

1937: ஷாங்காய் சமர் ஆரம்­ப­மா­னது.

1954: பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறை­யாக வானொ­லியில் ஒலி­ப­ரப்­பி­யது.

1960: பிரான்­ஸிடம் இருந்து மத்­திய ஆபி­ரிக்கக் குடி­ய­ரசு விடு­த­லையை அறி­வித்­தது.

1961: ஜேர்மன் ஜன­நா­யகக் குடி­ய­ரசு (கிழக்கு ஜேர்­மனி) தனது பிர­ஜைகள் மேற்கு பேர்­லி­னுக்கு தப்பிச் செல்­லாத வகை­யில் கிழக்கு மற்றும் மேற்கு பேர்லின் எல்­லை­களை மூடி­யது.

1969: அப்­பலோ 11 விண்­க­லத்தில் சந்­தி­ர­னுக்கு சென்று திரும்­பிய 3 விண்­வெளி வீரர்­களும் 3 வார காலம் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் விடு­விக்­கப்­பட்­டனர். அவர்­க­ளுக்கு அமெ­ரிக்க அரச விருந்­து­ப­சாரம் நடத்­தப்­பட்­டது.

1978: லெப­னான் தலை­நகர் பெய்­ரூத்தில் 150 பலஸ்­தீ­னி­யர்கள் தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­தனர்.

2004: மாலை­தீ­வுகள் தலை­நகர் மாலேயில் இடம்­பெற்ற அமை­தி­யான அரச எதிர்ப்புப் போராட்டம் இரா­ணு­வத்­தி­னரால் முறி­ய­டிக்­கப்­பட்­டது.

2004: புருண்­டியில் அக­திகள் முகாமில் இருந்த 156 டூட்சி இன அக­திகள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

2004: 28ஆவது ஒலிம்பிக் விளை­யாட்­டுக்கள் ஏதென்ஸில் ஆரம்­ப­மா­கின.

2010: புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்­க­ளான 492 இலங்கைத் தமி­ழர்­க­ளுடன் பய­ணித்த எம். வி.சன் ஸீ கப்பல் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவிலுள்ள எஸ்கிமால்ட் துறைமுகத்தை அடைந்தது.

2015: ஈராக் தலை­நகர் பாக்­தாத்தில் குண்டுத் தாக்­கு­த­லினால் 76 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 212 பேர் காய­ம­டைந்­தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!