கனேடிய டென்னிஸ்ஸின் புதிய நட்சத்திரம் பியன்கா

0 174

டொரன்­டோவில் நடை­பெற்ற ரொஜர்ஸ் கிண்ண டென்னிஸ் போட்­டியின் மகளிர் ஒற்­றையர் பிரிவில் கன­டாவின் 19 வய­தான பியன்கா அண்ட்­ரீஸ்கு சம்­பி­ய­னானார்.

ஐக்­கிய அமெ­ரிக்­காவின் செரினா வில்­லியம்ஸ் உபா­தைக்­குள்­ளா­னதால் இந்த சம்­பியன் பட்டம் பியன்­கா­வுக்கு அதிர்ஷ்­ட­வ­ச­மாக கிடைத்­துள்­ள­போ­திலும் ஆரம்ப சுற்­றி­லி­ருந்து அவர் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யதை யாராலும் மறுக்க முடி­யாது.

ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியின் முத­லா­வது செட்டில் பியன்கா 3–1 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் முன்­னி­லையில் இருந்தார்.

ஆனால் மறு­மு­னையில் அதீத ஆற்­றலை வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்த செரினா திடீ­ரென ஏற்­பட்ட முது­கு­வலி கார­ண­மாக தொடர்ந்து விளை­யாட முடி­யா­த­வ­ராக போட்­டி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்தார்.

இதனை அடுத்து பியன்கா அண்ட்ரீஸ்கு சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!