ஐ.சி.சி. உலக மகளிர் இருபது 20 தகுதிகாண் சுற்று: எட்டு நாடுகள் ஆகஸ்ட் 31முதல் மோதுகின்றன

0 1,187

அவுஸ்­தி­ரே­லி­யாவில் அடுத்த வருட முற்­ப­கு­தியில் அரங்­கேற்­றப்­ப­ட­வுள்ள ஐ.சி.சி. மகளிர் உலக இரு­பது கிரிக்கெட் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக எட்டு நாடுகள் பங்­கு­பற்றும் தகு­திகாண் சுற்று ஸ்கொட்­லாந்தில் இம் மாதம் 31ஆம் திக­தி­முதல் செப்­டெம்பர் 7ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.

மேற்­கிந்­தியத் தீவு­களில் 2018இல் நடை­பெற்ற மகளிர் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிக்கு முன்­னோ­டி­யாக நடை­பெற்ற தகு­திகாண் சுற்றில் சம்­பி­ய­னான பங்­க­ளாதேஷ் இவ் வருட ஆரம்பப் போட்­டியில் பப்­புவா நியூ கினியை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

பங்­க­ளா­தே­ஷுடன் தகு­திகாண் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அயர்­லாந்து தனது முத­லா­வது தகு­திகாண் போட்­டியில் நமி­பி­யாவை சந்­திக்­க­வுள்­ளது. இந்த இரண்டு போட்­டிகள் நடை­பெ­ற­வுள்ள அதே தினத்தில் ஸ்கொட்­லாந்தும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­ட­வுள்­ள­துடன் தாய்­லாந்தை நெதர்­லாந்து எதிர்­கொள்­ள­வுள்­ளது.

ஆபி­ரிக்க வல­யத்தில் ஸிம்­பாப்வே சம்­பி­ய­னா­ன­போ­திலும் அந் நாட்டின் கிரிக்கெட் நிறு­வ­னத்­துக்கு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை தடை விதித்­ததை அடுத்து சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நடத்­தப்­படும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் ஸிம்­பாப்வே பங்­கு­பற்ற முடி­யாது. இதனை அடுத்து ஸிம்­பாப்­வேக்கு பதி­லாக ஆபி­ரிக்க வல­யத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நமி­பி­யா­வுக்கு தகு­திகாண் சுற்றில் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

நெதர்­லாந்து (ஐரோப்­பிய வலயம்), பப்­புவா நியூ கினி (கிழக்கு ஆசிய பசுபிக் வலயம்), தாய்­லாந்து (ஆசிய வலயம்), ஐக்­கிய அமெ­ரிக்கா (அமெ­ரிக்­காக்கள் வலயம்) ஆகிய நாடுகள் தத்­த­மது வலயப் போட்­டி­களில் சம்­பி­ய­னாகி தகு­திகாண் சுற்றில் விளை­யாட தகு­தி­பெற்­றன.

பங்­க­ளாதேஷ், ஸ்கொட்­லாந்து, பப்­புவா நியூ கினி ஆகி­யன ஏ குழு­விலும் அயர்­லாந்து, தாய்­லாந்து, நமி­பியா, நெதர்­லாந்து ஆகி­யன பி குழ­விலும் தகு­திகாண் சுற்றில் விளை­யா­ட­வுள்­ளன. ஒவ்­வொரு குழு­விலும் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்­டி­களில் விளை­யாட தகு­தி­பெறும். அரை இறுதிப் போட்­டிகள் செப்­டெம்பர் 5ஆம் திகதி நடை­பெறும்.

இறுதிப் போட்டி செப்­டெம்பர் 7ஆம் திகதி நடை­பெ­று­வ­துடன் இறுதிப் போட்­டிக்கு தகு­தி­பெறும் இரண்டு நாடு­களும் ஐ.சி.சி. உலக மகளிர் சர்­வ­தேச இரு­பது 20 கிண்ணம் 2020 போட்டிகளில் விளையாட தகுதிபெறும்.

தகு­திகாண் சுற்று போட்­டிகள் ஸ்கொட்­லாந்தின் போர்­பார்­ஷயர் கிரிக்கெட் கழக மைதா­னத்­திலும் ஆர்ப்ரோத் விளை­யாட்டுக் கழக மைதா­னத்­திலும் நடை­பெ­ற­வுள்­ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!