தொண்டையில் சிக்கிய பல்செட்: ஒரு வாரத்தின் பின் கண்டுபிடிக்கப்பட்டது

Missing dentures found stuck in throat 8 days after surgery

0 1,172

சத்திரசிகிச்சையின்போது, கழன்று விழுந்த பல்செட் ஒன்று, நோயாளியின் தொண்டையில் சிக்கியிருப்பது ஒரு வாரத்தின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

72 வயதான ஆண் ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டது. இவரின் வயிற்றில் சத்திரசிகிச்சையொன்று செய்யப்பட்டது.

இச்சத்திரசிகிச்சையின்போது, தனக்குப் பல்செட் பொருத்தப்பட்டிருபப்தை மருத்துவர்களிடம் கூறுவதற்கு இவர் மறந்துவிட்டார்.

மயக்கமருந்துகொடுத்து சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தனது வாயிலிருந்து இரத்தம் வருவதாவும், எதையும் விழுங்குவதற்கு சிரமப்படுவதாகவும், கடும் வலி ஏற்படுவதாகவும் கூறினார்.

அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் பிரச்சனைகள் இருந்ததால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் அதற்கான மருந்துகளைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினர்.

எனினும், இரு நாட்களின் பின்னர் இந்த நோயாளி மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டார். மிக மோசமான நிலையிலிருந்த அவரால் மருந்துகளைக்கூட விழுங்க முடியாமல் இருந்தது.

அதன்பின், குழாய் ஒன்றில் பொருத்தப்பட்ட கெமரா ஒன்றை மூக்குத் துவாரம் வழியாக அனுப்பி பரிசோதித்தபோது, குரல்வளையைச் சுற்றி, அரைவட்ட வடிவ பொருளொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து நோயாளியிடம் மருத்துவர்கள் தெரிவித்தபோது. 8 நாட்களுக்கு முன் சத்திரசிகிச்சையின்போது தனது பல்செட் காணாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
என யோர்மௌத் நகரிலுள்ள பிரித்தானிய தேசிய வைத்தியசாலையின் மருத்துவர் ஹெரியட் கன்னீப் தெரிவித்துள்ளார்.

பின்னர் சத்திரிசிகிச்சை மூலம் மேற்படி பல்செட் அகற்றப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!