மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இந்தியா; கோஹ்லி, ஸ் ரேயாஸ், புவணேஷ்வர் பிரகாசிப்பு

0 23

ச ர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் விராத் கோஹ்லி குவித்த 42ஆவது சதமும் 18 மாத இடை­வெ­ளியின் பின்னர் தனது மீள் வரு­கையில் ஸ்ரீயார் ஐயர் பெற்ற அரைச் சதமும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இந்­தி­யாவை இல­கு­வாக வெற்றி பெறச்­செய்­தது.

கயானா ப்ரொவிடன்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் கடந்த 8ஆம் திகதி முத­லா­வது போட்டி மழை­யினால் கைவி­டப்­பட்­டதைத் தொடர்ந்து போர்ட் ஒவ் ஸ்பெய்னில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவு­களை டக்வேர்த் லூயிஸ் முறைமைப் பிர­காரம் 59 ஓட்­டங்­களால் இந்­தியா வெற்­றி­கொண்­டது.

இந்த வெற்­றி­யுடன் 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 க்கு 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்­தியா முன்­னிலை வகிக்­கின்­றது.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா 50 ஓவர்­களில் 7 விக்­கெட்­களை இழந்து 279 ஓட்­டங்­களைக் குவித்­தது.

அணித் தலைவர் விராத் கோஹ்லி 125 பந்­து­களை எதிர்­கொண்டு 14 பவுண்ட்­றிகள், ஒரு சிக்கர் அடங்­க­லாக 120 ஓட்­டங்­களைப் பெற்றார்.

அவ­ருக்கு பக்­க­ப­ல­மாக துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்ரேயாஸ்  ஐயர் 68 பந்­து­களில் 71 ஓட்­டங்­களைப் பெற்றார்.

இவர்கள் இரு­வரும் நான்­கா­வது விக்­கெட்டில் 125 ஓட்­டங்­களைப் பகிர்ந்­தனர்.

மேற்­கிந்­தியத் தீவுகள் பந்­து­வீச்சில் கார்லோஸ் ப்ரத்வெய்ட் 53 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். 280 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காகக் கொண்டு பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு, மழை கார­ண­மாக 46 ஓவர்­களில் 270 ஓட்­டங்கள் என்ற திருத்­தப்­பட்ட வெற்றி இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

ஆனால் மேற்­கிந்­தியத் தீவுகள் 42 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 210 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்று தோல்வி அடைந்­தது. துடுப்­பாட்­டத்தில் எவின் லூயிஸ் (65 ஓட்­டங்கள்), நிக்­கலஸ் பூரன் (42) ஆகிய இரு­வரே திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

தனது 300ஆவது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டிய கிறிஸ் கெய்ல் ­வெறும் 11 ஓட்­டங்­க­ளையே பெற்றார். மேற்­கிந்­தியத் தீவுகள் 12.5 ஓவர்­களில் 2 விக்­கெட்­களை இழந்து 3 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது மழை குறுக்­கிட்­டதால் திருத்­தப்­பட்ட வெற்றி இலக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இந்திய பந்துவீச்சில் புவணேஷ்வர் குமார் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் ஷமி 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக விராத் கோஹ்லி தெரிவானார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!