மனூஷ் தீவிலுள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்திஷ் ஈரானிய எழுத்தாளருக்கு சுயசரிதைக்கான அவுஸ்திரேலியாவின் அதி உயர் விருது

0 129

மனூஷ் தீவி­லுள்ள அவுஸ்­தி­ரே­லிய தடுப்பு முகாமில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள, குர்த்திஷ் ஈரா­னி­ய­ரான பெரோஸ் பூச்சானி எழு­திய நூலுக்கு சுய­ச­ரி­தைக்­கான அவுஸ்­தி­ரே­லிய தேசிய விருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

எழுத்­தா­ள­ரான பெரோஸ் பூச்சானி, 2013 ஜுலை மாதம் 75 பேர் கொண்ட படகு ஒன்றின் மூலம் அவுஸ்­தி­ரே­லியா நோக்கிச் சென்­ற­போது, அந்­நாட்டுப் படை­யி­னரால் மறிக்­கப்­பட்டு, பப்­புவா நியூகினி­யி­லுள்ள மனூஷ் தீவுக்கு அழைத்துச் செல்­லப்­பட்டார்.

அப்­போ­தி­ருந்து. மனூஷ் தீவி­லுள்ள அவுஸ்­தி­ரே­லிய குடி­யேற்றத் தடுப்பு முகாமில் அவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். இவர் தனது சுய­ச­ரி­தையை “ நோ ப்ரெண்ட்ஸ் பட் மௌண்டன்ஸ்” எனும் தலைப்பில் எழு­தி­யி­ருந்தார்.இந்­நூ­லுக்கு சிறந்த சுய ­ச­ரி­தைக்­கான அவுஸ்­தி­ரே­லிய தேசிய விருது வழங்­கப்­பட்­டுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் நேற்று திங்­கட்­கி­ழமை அறி­வித்­தனர்.

17,000 டொலர் (சுமார் 20 இலட்சம் ரூபா) பரிசுப் பணம் கொண்ட இவ்­வி­ருதை பெரோஸ் பூச்சானி நேர­டி­யாக பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. அவர் ஏற்பாட்டாளர்­க­ளுக்கும் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் தொலை­பேசி மெசேஜ் மூலம் நன்றி தெரி­வித்தார். இவர் ஏற்­கெ­னவே அவுஸ்­தி­ரே­லி­யாவின் விக்­டோ­ரியா மாநில பிர­த­மரின் இலக்­கிய விருது, மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாநில பிரதமரின் இலக்கிய விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!