பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

0 341

                                                                                                                  (இராஜதுரை ஹஷான்)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா  மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது  தொடர்பான விசேட அமைச்சரவைப் பத்திரம் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட து.

இதனையடுத்து மலையக அரசியல்வாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைய இன்று (13)  சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு  அனுமதி கிடைத்துள்ளதுடன். கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சரவை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மேலதிகமாக ஒரு நாளைக்கு 50 ரூபா வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது

ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்குக்  கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்த நிலையிலும் குறித்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவு பெருந்தோட்ட அமைச்சின் ஊடாக வழங்க முடியாது என்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!