‘பிக்பொஸ் 3’ தர்ஷன், ஷனம் ஷெட்டி நடிக்கும் மேகி

0 3,757

விஜய் டி.வியின் பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பவர் தர்ஷன். இவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘மேகி’. நடிகை ஷனம் ஷெட்டி நாயகியாக நடித்து தயாரிக்கிறார். பாண்டியராஜன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சாம் சி.எஸ். இசை அமைக்கிறார், கிரிக் வாஹின் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளரும் நடிகையுமான ஷனம் ஷெட்டி, பாண்டியராஜன், பாத்திமா பாபு என பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஷனம் ஷெட்டி பேசியதாவது:

தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன்.

அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

உடனே அவரிடம் அணுகி நான் தயாரிக்கும் படத்தின் ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன்.

நான் நினைத்தது போலவே தர்ஷன், என் பட கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தார்.அதனால் தேர்வானார்.அவர் ‘பிக்பொஸ் 3’ நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியே வந்ததும் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும். ‘பிக்ெபாஸ் 3’ நிகழ்ச்சியின் வெற்றியாளராக வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்படிப்பு நடத்தினோம்.

அனிதா அலெக்ஸ் தயாரிப்பில் ‘எதிர்வினை ஆற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன்.

அப்படத்தின் பாடலும் விரைவில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 14 படங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால், தயாரிப்பு என்று வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டும் என்கிற அனுபவம் கிடைத்தது. இவ்வாறு அவர் பேசினார்.

பாத்திமா பாபு பேசும்போது, ‘  ’ படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள்.

பிக் ெபாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்­ஹாசனிடம் இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது, தர்ஷனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதன்பிறகு தான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிக­வும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது.

நிச்சயம் இந்­நிகழ்ச்சி­யின் வெற்றியாளனாக வருவான்.என் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன் ‘பிக் பொஸ் -3’ யிலிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மக­னாக தத்­தெடுக்கப் போகி­றேன்.

தற்போதுள்ள சூழலில் திரைப்­படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக ஷனம் ஷெட்டி செய்திருக்கிறார்.தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலியான விஷயம். அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் முதல் பாடலை நடிகர் பாண்டியராஜன் வெளியிட்டார். முதல் பார்வை போஸ்டரை பாத்திமா பாபு, அனிதா அலெக்ஸ், நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் வெளியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!